CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Agri Info

Adding Green to your Life

March 17, 2024

CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 மத்திய அரசின் CIPET நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Professor, Lecturer, Assistant Librarian ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 05.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


CIPET காலியிடங்கள்:

CIPET நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Professor – 07 பணியிடங்கள்

Lecturer – 02 பணியிடங்கள்

Assistant Librarian – 01 பணியிடம்

CIPET கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் BE, B.Tech, ME, M.Tech, Ph.D, Bachelor’s Degree, Master Degree, B.Lib.ScB.Lib.I.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக வேண்டும்.

CIPET வயது:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும்.

CIPET மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CIPET தேர்வு செய்யும் விதம்:              

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIPET விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment