இந்திய அரசு நிறுவனமான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) தனி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 323 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Personal Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 323
கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 25,
SC/ST, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://upsconline.nic.in/upsc/OTRP/index.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
27.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment