Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னையால் அவதியா? பாதிப்புக்களை குறைக்கும் வழிகள் – வழிகாட்டும் ஆராய்ச்சி! - Agri Info

Adding Green to your Life

March 9, 2024

Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னையால் அவதியா? பாதிப்புக்களை குறைக்கும் வழிகள் – வழிகாட்டும் ஆராய்ச்சி!

 

Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னையால் அவதியா? பாதிப்புக்களை குறைக்கும் வழிகள் – வழிகாட்டும் ஆராய்ச்சி!நமது மாறிவிட்ட வாழ்க்கை சூழலில், இன்று நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்று தெரிந்துகொண்டு அதை கடைபிடிப்பது அவசியம். இன்று பலர் ஃபேட்டி லிவர் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை சுட்டிக்காட்டும் ஆராய்ச்சி குறித்து அறிந்துகொள்ளுங்கள். 

இந்திய அளவில் உடலுழைப்பு அதிகம் இல்லாமலும், உணவு முறைகளில் மாற்றம் ஏற்பட்டு அதிக கொழுப்புள்ள உணவு வகைகள் அதிகம் சேர்க்கப்படுவதாலும், பிற காரணங்களாலும், ஈரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது MASH-Metabolic Dysfunction Associated SteatoHepatitis-25-30 இந்தியர்களுக்கு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஈரலின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு (ஈரல் செயலிழப்பு, ஈரல் சுருக்கம், Liver Cirrhosis) ஏற்படுகிறது.

சென்னை தனியார் மருத்துவமனையில் 3 லட்சம் பேர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 30-50 வயதிற்கு இடைப்பட்ட 38 சதவீதம் பேர்களுக்கு ஈரலில் அதிக கொழுப்பு இருப்பது (Fatty Liver) தெரியவந்துள்ளது.

15 வயதிற்கு கீழ் உள்ள 25 சதவீதம் பேருக்கும் ஈரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்திருப்பதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாராயம் தவிர்த்து, அதிக உடல்பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு போன்றவையே ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

ஈரலில் அதிக கொழுப்பு இருக்கும் 25 சதவீதம் பேருக்கு ஈரல் செயலிழப்பும், 8 முதல் 10 சதவீதம் பேருக்கு ஈரல் சுருக்கமும் (Liver Cirrhosis) ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆரம்ப கட்ட, ஈரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துள்ள நோயில் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருப்பதால், நோயை ஆரம்பத்தில் கண்டறிய புதுவகை உபகரணங்கள் வந்துள்ளது. (ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630 கருவி).

இதன் மூலம் ஈரலில் சிறு பகுதியை வெட்டியெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தாமலே (Liver Biopsy) ஈரலின் விரிவடையும் தன்மையை (Elasticity) கண்டறிந்து அதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதோடு (இதை வெளிநோயாளி பிரிவிலே எளிதில் செய்ய முடியும். மருத்துவமனை அனுமதி தேவையில்லை) எப்போது பிரச்னைகள் அதிகம் வரும் (ஈரல் செயலிழப்பு) என்பதையும் முன்கூட்டியே கண்டறிய முடியும்.

குறிப்பாக இந்நோய் ஏற்படுவதற்கு,

தேவையான உடலுழைப்பு இல்லாமை

உணவுத் தேர்வில் தவறு செய்து அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுவது

உடல் பருமன்

சர்க்கரை நோய் தாக்கம்

சாராயம் (Alcohol)

போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளதால்,

ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தடுக்க,

சரியான மற்றும் தேவையான உடற்பயிற்சி,

உணவில் தேவையற்று அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல்

உடல் பருமனைக் குறைக்க அதிக நார்சத்துள்ள பழங்கள் மற்றும் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்

விலங்கு கொழுப்பை கணிசமாகக் குறைத்தல்

போன்றவை பெருமளவு உதவும் என்பதை மக்கள் புரிந்துகொண்டு, அதை கடைப்பிடித்தால்,

ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தடுத்து நலமுடன் வாழ முடியும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment