வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Assistant General Manager, Research Associate போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் https://www.ibps.in/ என இணையதள முகவரி வாயிலாக 27.03.2024 அன்று முதல் 12.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
IBPS காலியிடங்கள்:
Professor, Assistant General Manager, Research Associate, Hindi Officer, Deputy Manager, Analyst Programmer ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் IBPS நிறுவனத்தில் காலியாக உள்ளது.
IBPS கல்வி:
இந்த IBPS சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor’s Degree, Master Degree, Ph.D, CA, BE, B.Tech, MCA, M.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IBPS வயது:
01.03.2024 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Professor – 47 வயது முதல் 55 வயது வரை
- Assistant General Manager – 35 வயது முதல் 50 வயது வரை
- மற்ற பணிகளுக்கு – 23 வயது முதல் 30 வயது வரை
IBPS ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.68,058/- முதல் ரூ.2,92,407/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
IBPS தேர்வு முறை:
இந்த IBPS சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Presentation, Group Exercises, Personal Interview, Online Exam, Item Writing Exercises, Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
IBPS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
IBPS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://ibpsonline.ibps.in/ibpsvpmarc24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 27.03.2024 அன்று முதல் 12.04.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment