ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Adding Green to your Life

March 2, 2024

ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Consultant (Administrative) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICMR காலிப்பணியிடங்கள்:

Consultant (Administrative) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு விஷயங்களில் குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Consultant விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment