IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு! - Agri Info

Adding Green to your Life

March 14, 2024

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 IDBI வங்கியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Data Protection Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (15.03.2024) முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • IDBI வங்கியில் Data Protection Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு 01.01.2024 அன்றைய தேதியின் படி 45 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • Data Protection Officer பணிக்கு அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து IDBI வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Preliminary screening, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் வழிமுறை:

    Data Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து rec.experts@idbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment