ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 11.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. Technical Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ரயில் பெட்டித் தொழிற்சாலை பணியிடங்கள்:
Technical Apprentices பணிக்கென 550 பணியிடங்கள் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (RCF) காலியாக உள்ளது.
Technical Apprentices கல்வி விவரம்:
இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு + பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Technical Apprentices வயது விவரம்:
Technical Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 31.03.2024 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Technical Apprentices சம்பள விவரம்:
இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Apprentices விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
RCF தேர்வு செய்யும் முறை:
Technical Apprentices பணிக்கு பொருத்தமான நபர்கள் Merit List என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
RCF விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PWD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்ற நபர்கள் – ரூ.100/-
RCF விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 09.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment