JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் NMHS Survey Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
JIPMER காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, NMHS Survey Coordinator பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
NMHS Survey Coordinator கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் Public Health, Psychology, Social work, Sociology, Rural Development பாடப்பிரிவில் Master டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
NMHS Survey Coordinator வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
NMHS Survey Coordinator சம்பளம்:
இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
JIPMER தேர்வு முறை:
இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 08.04.2024 அன்று நடைபெறவுள்ள Walk-in Recruitment (Written Test / Interview / Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER விண்ணப்பிக்கும் முறை:
NMHS Survey Coordinator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து maha.psmrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment