SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,80,000/- - Agri Info

Adding Green to your Life

March 1, 2024

SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,80,000/-

 Steel Authority of India Limited (SAIL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Specialist, GDMO ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,80,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SAIL பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Specialist பணிக்கென 06 பணியிடங்களும், GDMO பணிக்கென 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Specialist / GDMO கல்வி விவரம்:

MBBS, MS, DNB, PG Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை MCI / NMC / NBE அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

SAIL வயது விவரம்:

19.03.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 69 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Specialist / GDMO ஊதிய விவரம்:

Specialist பணிக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும்,

GDMO பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

SAIL தேர்வு செய்யும் முறை:

இந்த SAIL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 19.03.2024 அன்று காலை 9.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Specialist / GDMO விண்ணப்பிக்கும் வழிமுறை:

Specialist மற்றும் GDMO பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பித்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது உடன் கொண்டு வந்து காலை 9.30 மணி முதல் 11.00 மணிக்குள் நேரில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment