SEBI Officer வேலைவாய்ப்பு 2024 – சற்று முன் வெளியானது || 97 காலிப்பணியிடங்கள் - Agri Info

Adding Green to your Life

March 15, 2024

SEBI Officer வேலைவாய்ப்பு 2024 – சற்று முன் வெளியானது || 97 காலிப்பணியிடங்கள்

 செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) என்பது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், நாடாளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.SEBI காலிப்பணியிடங்கள்:

1. Officer Grade A (AM) – General – 62  பணியிடங்கள்
2. Officer Grade A (AM) – Legal – 05 பணியிடங்கள்
3. Officer Grade A (AM) – Information Technology – 24 பணியிடங்கள்
4. Officer Grade A (AM) – Engineering (Electrical) – 02 பணியிடங்கள்
5. Officer Grade A (AM) – Research – 02 பணியிடங்கள்
6. Officer Grade A (AM) – Official Language – 02 பணியிடங்கள்

என மொத்தம் 97 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் Master’s Degree/ Post Graduate Diploma/ Bachelor’s Degree in Law/ Bachelor’s Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SEBI வயது வரம்பு:

31.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 1994 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

SEBI  சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Officer Grade A (AM) – Rs.44500 – 89150/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.sebi.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download  Notification 2024 Pdf

Apply Online



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment