சென்னை TIDCO நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.1,00,000/- மாத ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

March 17, 2024

சென்னை TIDCO நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.1,00,000/- மாத ஊதியம்!

 

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 15.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. Accounts Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TIDCO பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Accounts Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே TIDCO நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Accounts Officer கல்வி விவரம்:

இந்த TIDCO நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Degree + ACA / AICMA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Accounts Officer வயது விவரம்:

Accounts Officer பணிக்கு 01.01.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது முதல் 22 வயதுக்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Accounts Officer சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.1,00,000/- சம்பளமாக பெறுவார்கள்.

TIDCO தேர்வு செய்யும் முறை:          

இந்த TIDCO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TIDCO விண்ணப்பிக்கும் வழிமுறை:

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 16.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை https://careers.tidco.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment