ஆசிரியர் தேர்வு வாரியம் 2024ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழக கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) வாயிலாக 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் TN TRB SGT 2024 என்னும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதில் கூறப்பட்டு இருந்தது. இத்தகைய தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க 15.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இக்கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் பல விண்ணப்பதாரர்கள் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
🔻🔻🔻
No comments:
Post a Comment