TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா? - Agri Info

Adding Green to your Life

March 28, 2024

TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். 

90 பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (28.03.2024) வெளியிட்டுள்ளது.

அதன்படி 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு தேர்வு ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 1 பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளதுஇந்நிலையில் குரூப் - 1 முதல்நிலை தேர்வு ஜூலை 11 நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி வாரியான காலியிட விவரம்

துணை ஆட்சியர் (Deputy Collector) – 16

காவல் துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) – 23

உதவி ஆணையர்வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes)) – 14

துணைப் பதிவாளர்கூட்டுறவு சங்கங்கள் (Deputy Registrar of Cooperative Societies) – 21

உதவி இயக்குனர்ஊரக வளர்ச்சி துறை (Assistant Director of Rural Development) – 14

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) – 1

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் (District Officer (Fire and Rescue Services)) - 1

கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்வணிகவியல்பொருளாதாரம்சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ.56,100 – 2,05,700

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வுமுதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும்இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 13.07.2024

முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும்முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வுஇது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாதுஇது தகுதித் தேர்வு மட்டுமேஇந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

அடுத்த மூன்று தாள்களும்பொது அறிவு பகுதியை சார்ந்தவைஓவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும்கேட்கப்படும்இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம்முதன்மைத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : முதல்நிலைத் தேர்வு ரூ.100, முதன்மைத் தேர்வு ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும்தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்உங்களது அனைத்து விவரங்களையும்சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்திசமர்ப்பிக்க வேண்டும்சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துசேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/04_2024_GRP1_TAM_.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

 

No comments:

Post a Comment