Search

10ம் வகுப்புத் தேர்ச்சியா... இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 4660 காலியிடங்கள்

 இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை (Railway protection Force) மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் (Railway Protection Special Force) காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் காவல் துணை ஆய்வாளர் (Sub- Inspector) பணியிடங்களுக்கான  ஆட்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 14ம் தேதிக்குள் www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம், இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4, 208
கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களும், 452 துணை ஆய்வாளர் (Sub - Inspector) பணியிடங்களுக்கும் நிரப்பப்பட உள்ளது  . இதில்  10 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு : கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2024  அன்று 18 -25 க்கு கீழ் இருக்க வேண்டும். துணை ஆய்வாளர் பதவிக்கு 20 - 25க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி: கான்ஸ்டபிள் பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இனமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…துணை ஆய்வாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்துத் தேர்வு , உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும். எழுத்துத் தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக உள்ளது. பொது விழிப்புணர்வு பகுதியில் 50 கேள்விகளும், பிரச்னை தீர்க்கும் ஆற்றல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும், காரணங்கானல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும் கேட்கப்படும். சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்த ஆட்சேர்ப்பு அறிவிவிக்கை தொடர்பான தகவல்களுக்கு https://rpf.indianrailways.gov.in/RPF//index.jsp என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment