புதுச்சேரியில் நீதித்துறையில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 37 வயது, MBC/ OBC / EBC / BT/ BCM பிரிவினருக்கு 35 வயது, பிறருக்கு 32 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பதவிக்கு டிகிரி, ஸ்டெனோகிராபர் லோவர்/ஜூனியர் கிரேடு (ஆங்கிலம்), டைப் ரைட்டிங் ஹையர்/ சீனியர் கிரேடு (ஆங்கிலம்) மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏதாவது ஒரு மொழியில் டைப் ரைட்டிங் முடித்திருக்க வேண்டும்.
- ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பதவிக்கு 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் லோவர்/ஜூனியர் கிரேடு (ஆங்கிலம்), டைப் ரைட்டிங் ஹையர்/ சீனியர் கிரேடு (ஆங்கிலம்) மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏதாவது ஒரு மொழியில் டைப் ரைட்டிங் முடித்திருக்க வேண்டும்.
- மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர் பதவிக்கு தெலுங்கு / மலையாளம் மொழியில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் கிளார்க் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு ஆகிய மொழிகளில் டைப் ரைட்டிங் லோவர்/ ஜூனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
- தட்டச்சர் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் டைப் ரைட்டிங் லோவர்/ ஜூனியர் கிரேடு பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்/தெலுங்கு/ மலையாளம் ஆகிய மொழியில் பெற்றிருக்க வேண்டும்.
- டிரைவர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Light Motor Vehicle ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் competency test, மெடிக்கல் டெஸ்ட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.04.2024 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடத்திற்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதர பணியிடத்திற்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், ST மற்றும் SC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar General,
High Court of Madras,
Chennai - 600104.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment