2024-25-ம் ஆண்டுக்கு வெசல் நேவிகேட்டர் (VESSEL NAVIGATOR COURSE - படகு இயக்குபவர்), மெரைன் ஃபிட்டர் ( MARINE FITTER COURSE) ஆகிய பணியிடங்களுக்கான பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சிக்கான மத்திய நிறுவனம் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் கொச்சி / சென்னை / விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 2 ஆண்டுகால உறைவிடப் பயிற்சியாக நடத்தப்படும்.
இதற்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு பயிற்சி பெற்றிருப்பதும், கணிதம், அறிவியலில் தனித்தனியே 40% மதிப்பெண் பெற்றிருப்பதுமாகும்.
வயது வரம்பு 2024, ஆகஸ்ட் 1 நிலவரப்படி 15 முதல் 20 வயது வரை எஸ்சிஎஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் தளர்வு இருக்கும்.
விஎன்சி, பணிக்கான பயிற்சிக்கு 20 பேர், எம்எஃப்சி பணிக்கான பயிற்சிக்கு 20 பேர் என 3 மையங்களிலும் மொத்தம் 120 பேர் பயிற்சி பெற முடியும்.
பயிற்சி பெறுபவர்கள் அகில இந்திய அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை www.cifnet.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொதுப்பிரிவினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.350-ம் எஸ்சி / எஸ்டி பிரிவினர் 175-ம் விண்ணப்பக் கட்டணமாக கேட்பு வரைவோலையை (டிடி) அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் 14.06.2024.
கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, ஆகிய இடங்களில் 29.06.2024 (சனிக்கிழமை) பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் 07.07.2024 ஞாயிறன்று வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் www.cifnet.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து மத்தியப்படுத்தப்பட்ட கலந்தாய்வு கொச்சியில் 18.07.2024 அன்று நடைபெறும். இது பற்றி மேலும் விவரங்களை தமிழில் அறிந்து கொள்ள 94452 13673, 86680 49365, 99520 62628, 74014 73752 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment