Search

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் 118 காலியிடங்கள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) என்பது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியம் ஆகும். இந்த வாரியம் மத்திய அரசின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், இந்த கல்வி வாரியம் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Secretary, Junior Engineer, Junior Translation officer, Accountant , Junior Accountant ஆகிய பதவிகள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்படப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் விவரம்: 

Assistant Secretary (Administration) : மொத்தம் 18 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு: 18 லிருந்து 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Secretary (Academics): மொத்தம் 16 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரம்பு: 18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட்/ஸ்லெட் தேர்ச்சி அல்லது பி.ஹெச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Skill Education: மொத்தம்  8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Training: மொத்தம் 22 இடங்கள் நிரப்பப்பட உள்ளன . வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட் தேர்ச்சி மற்றும் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட்/ ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts Officer: 3 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது: 18 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொருளியல்/வணிகவியல்/ அக்கவுண்ட்ஸ்/நிதி/வணிக படிப்புகள்/ காஸ்ட் அக்க வுன்டன்சியில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எஸ்ஏஎஸ்/ஜேஏடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineer: 17 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது: 18 லிருந்து 32க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ.,/ பிடெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Junior Translation Officer:  காலியிடங்கள் எண்ணிக்கை 7 ஆகும். 18 லிருந்து 30க்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: இந்தியுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant: 7 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொருளியல் / வணிகவியல்/ அக்கவுன்ட்ஸ்/ நிதி/ வணிக படிப்புகள்/காஸ்ட் அக்க வுண்டிங் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

Junior Accountant: 20 காலியிடங்கள்.  வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: அக்கவுன்டன்சி பிரிவில் பிளஸ் 2 தேர்ச் சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலம், 30 வார்த்தைகள் இந்தி என கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்

விண்ணப்பக் கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு ₹1,500. பணி எண்: 3 லிருந்து 6 வரைக் கும் ₹800/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. https://www.cbse.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2024 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment