பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பணி கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பல நபர்களுக்காக பணிகள் கொட்டி கிடைக்கின்றது.
நவோதயா வித்யாலயா சமிதா பணி நிறுவனம் சார்பாக சுமார் 1377 காலி பணியிடங்கள் உள்ளது. அதாவது செவிலியர் உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், மொழிபெயர்ப்பு அலுவலர், சட்ட உதவியாளர், ஸ்டேனோகிராஃபர், கணினி ஆப்ரேட்டர், கேட்டரிங் மேற்பார்வையாளர், ஜூனியர் செயலக உதவியாளர், இளநிலை செயலக உதவியாளர், எலக்ட்ரிஷன் கம் பிளம்பர், லேப் அட்டன்டன்ட், மெஸ் ஹெல்பர், மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் என இந்த பதவிகளுக்கான பணிகள் காலியாக உள்ளது.
இதற்கான கல்வி தகுதிகள் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பிஎஸ்சி நர்சிங், பிகாம், பி இ பி டெக் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்கலாம்.
அதேபோல் பதவியின் தன்மைகேற்ப 27 வயது முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும். தேர்வு முறையாக எழுத்து தேர்வு தட்டச்சு தேர்வு திறன் தேர்வு நேர்காணல் போன்றவை நடைபெறும்.
தேர்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடைபெறும் இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் https://navodaya.gov.in என்ற இணையத்தளம் முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 30.4.2024 என்பதும் குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
No comments:
Post a Comment