மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலய பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,377 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இம்மாதம் 30ம் தேதிக்குள் (30.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிடங்கள்: செவிலியர் உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், மொழிபெயர்ப்பு அலுவலர், சட்ட உதவியாளர், ஸ்டேனோகிராஃபர், கணினி ஆப்ரேட்டர், கேட்டரிங் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 14 வகைமைகளின் கீழ் காலிப்பணியிடங்கள் நீர்ப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை https://nvs.ntaonline.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30-4-2024 ஆகும்.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment