பொதுத்தமிழ் (General Tamil)
பகுதி – அ
இலக்கணம்
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்
1.பொருத்துக :
(A) வெய்யோன் 1. காற்றாடி
(B) கறங்கு 2. யானை
(C) கொண்டல் 2. பகலவன் (சூரியன்)
(D) வேழம் 4. மழைமேகம்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
2. பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.
(A) வெறுக்கை – நெய்பவர்
(B) பாசவர் – வெற்றிலை விற்போர்
(C) ஓசுநர் – செல்வம்
(D) காருகர் – எண்ணெய் விற்போர்
(E) விடை தெரியவில்லை
Answer: (B) பாசவர் – வெற்றிலை விற்போர்
3. பொருத்துக
(a) யாக்கை 1. உடம்பு
(b) புன்புலம் 2. உரிக்கும்
(c) வேழம் 3. புல்லியநிலம்
(d) பொளிக்கும் 4. ஆண்யானை
Answer: (a)1, (b)3, (c)4, (d)2
4. பொம்மல் என்பதன் பொருள்
(A) அரிசி
(B) சோறு
(C) பொங்கல்
(D) கம்பு
Answer: (B) சோறு
5. பாடல் அறிந்து பொருத்துக.
(a) காலை மாலை உலாவி நிதம் – 1. ஒளவையார்
(b) மீதூண் விரும்பேல் 2. திருமூலர்
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 3. திருவள்ளுவர் –
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
6. ‘பரவை’ – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) மலை
(B) கடல்
(C) ஆறு
(D) உயிர்வகை
Answer: (B) கடல்
7. பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
8. பொருத்துக.
(a) 876 – 1. ௩ ௬ ௯
(b) 543 – 2. ௩ உ ௧
(c) 321 – 3. ௫ ௪ ௩
(d) 369 – 4. ௮ ஏ ௬
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
9. பொருத்துக.
(A) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும்
(B) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்
(C) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(D) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
10. பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
11. பொருத்துக.
(a) ஞானக் கண்ணாடி 1. உரைநடை வடிவிலான சமயநூல்
(b) வேதவிளக்கம் 2. நகைச்சுவைக் கதை நூல்
(c) தொன்னூல் விளக்கம் 3. சமயநூல்
(d) பரமார்த்தகுரு கதை 4. குட்டித் தொல்காப்பியம்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
12. ‘உளை’ என்பதன் பொருள்
(A) பக்கம்
(B) பிடரி மயிர்
(C) அடுப்பு
(D) உதவு
Answer: (B) பிடரி மயிர்
13. சரியான இணையைத் தேர்க.
(A) நவ்வி – மான்
(B) புனல் – மேகம்
(C) முகில் – சொரிதல்
(D) உகுதல் – நீர்
Answer: (A) நவ்வி – மான்
14. “ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்
தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்’ – இதில் ‘தீன்’ என்பதின் பொருள் என்ன?
(A) நகரம்
(B) சேனாவீரர்கள்
(C) மார்க்கம்
(D) கதிரவன்
Answer: (C) மார்க்கம்
15. சரியான இணையைத் தெரிவு செய்க.
(A) துகிர்- துணி
(B) நொடை – விலை
(C) கிழி- குற்றம்
(D) மறு – பவளம்
Answer: (B) நொடை – விலை
16. “பெரியாரைப் பேணித் தமரா கொளல்” – இதில் “தமர்” என்பதன் பொருள்
(க) நூல்
(B) துணை
(C) பேறு
(D) அரிய
Answer: (B) துணை
17. பொருத்துக.
(a) தோவாளை 1. ஆட்டுச்சந்தை
(b) அப்யலூர் 2. பூச்சந்தை
(c) ஈரோடு 3. மீன்சந்தை
(d) நாகப்பட்டினம் 4. ஜவுளிச்சந்தை
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
18. பொருத்துக.
(a) வீரமாமுனிவர் 1. அயர்லாந்து
(b) ஜி.யு. போப் 2. ஜெர்மன்
(c) கால்டுவெல் 3. இங்கிலாந்து
(d) சீகன்பால்கு 4. இத்தாலி
Answer: (a)4, (b)3, (c)1, (d)2
19. சரியான இணைகளைத் தேர்ந்தெடு
- பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
- உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
- காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
- புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
Answer: 1ம் மற்றும் 3ம் சரி
20. “பொருத்தமான விடையைத் தருக”
(a) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு – 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
21. சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை – தாமரை மலர்
(b) மரை – பவளம்
(c) விசும்பு – வானம் .
(d) மதியம் – நிலவு
Answer: (c) மற்றும் (d) சரி
22. பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் – 1. கரடி
(b) எண்கு – 2. காட்சி
(c) வள்உசிர் – 3. பெரிய யானை
(d) தெரிசனம் – 4. கூர்மையான நகம்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
23. சொல்லுக்கேற்ற பொருளறிக :
(A) வலிமை – திண்மை
(B) நான் – தன்னைக்குறிப்பது
(C) கான் – பார்
(D) துணி – துன்பம்
Answer: (A) வலிமை – திண்மை
24. சரியான இணையைத் தேர்வு செய்க.
சுவை – பயன்
(a) இனிப்பு 1. இனிமை
(b) துவர்ப்பு 2. வளம்
(c) புளிப்பு 3. உணர்வு
(d) கார்ப்பு 4. ஆற்றல்
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
25. ‘அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகி’…. என்ற தொடரில் அரி என்பதன் பொருள் யாது?
(A) மனித வடிவம்
(B) சிங்கம்
(C) நரசிங்கம்
(D) தேவர்கள்
Answer: (B) சிங்கம்
26. ‘கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
(A) அஞ்சுபவன்
(B) அடக்கமுடையவன்
(C) அஞ்சாதவன்
(D) அறியாதவன்
Answer: (C) அஞ்சாதவன்
27. ஒப்புரவு என்பதன் பொருள்
(A) அடக்கமுடையது
(B) பண்புடையது
(C) ஊருக்கு உதவுவது
(D) செல்வமுடையது
Answer: (C) ஊருக்கு உதவுவது
28. “நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக?
(A) நோய்
(B) பாதுகாப்பு
(C) துன்பம்
(D) எமன்
Answer: (C) துன்பம்
29. ஒப்புரவு என்பதன் பொருள்
(A) அடக்கமுடையது
(B) பண்புடையது
(C) ஊருக்கு உதவுவது
(D) செல்வம் உடையது
Answer: (C) ஊருக்கு உதவுவது
30. பொருத்துக :
(a) துஞ்சல் – 1. முயற்சி
(b) தமியர் – 2. வலிமை
(c) தாள் – 3. சோம்பல்
(d) நோன்மை – 4. தனித்தவர்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
31. பொருளறிந்து பொருத்துக:
(a) ஒல்லை 1. சிவன்
(b) ஈறு 2. எருமை
(c) மேதி 3. எல்லை
(d) அங்கணர் 4. விரைவு
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
32. குருசு என்பதன் பொருள்
(A) ஏளனம்
(B) சிலுவை
(C) சினம்
(D) அடியார்
Answer: (B) சிலுவை
33. “கொண்ழூ’ பொருள் கூறுக?
(A) மேகம்
(B) போர்
(6) சுற்றம்
(D) வானம்
Answer: (A) மேகம்
34. கடம்-இச்சொல்லின் பொருள்
(A) குடம்
(B) பாம்பு
(C) வேம்பு
(D) உடம்பு
Answer: (D) உடம்பு
35. சுபாஷாபிமானம் – பொருள் கூறுக.
(A) தாய் நாட்டுப் பற்று
(B) தாய் மொழிப் பற்று
(C) தாயின் மீது பற்று
(D) சகோதரப் பற்று
Answer: (B) தாய் மொழிப் பற்று
36. பொருளறிந்து பொருத்துக :
(a) ஒல்காமை 1. சிறப்பு
(b) விழுமம் 2. வலியர்
(c) திண்ணியர் 3. துன்பம்
(d) வீறு 4. தளராமை
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
37. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் – இக்குறட்பாவில் அற்றம் என்பதன் பொருள் யாது?
(A) இறுதி
(B) அழிவு
(C) உண்மை
(D) ஒழுகுவது
Answer: (B) அழிவு
38. ‘தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்’ என்ற தொடரில் சிதவலர் என்பதன் பொருள் யாது?
(A) ஊன்றுகோல் உடையவர்
(B) தலைப்பாகை கட்டியவர்
(C) வலிமை மிக்கவர்
(D) முயற்சி அற்றவர்
Answer: (B) தலைப்பாகை கட்டியவர்
39. பொருத்துக :
(a) செறு – 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. விதை
(d) வட்டி – 4. வயல்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
40. “தேவியும் ஆயமும் சித்திரா பதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்” – என்ற தொடரில் ஆயம் என்பதன் பொருள் யாது?
(A) தோழியர் கூட்டம்
(B) பெண்டிர் – ஆடவர் கூட்டம்
(C) மழலைக் கூட்டம்
(D) சான்றோர் கூட்டம்
Answer: (A) தோழியர் கூட்டம்
41. பொருத்துக :
(a) சரதம் 1. தூய்மை
(b) பவித்திரம் 2. அரசன்
(c) பெருமாள் 3. கடல்
(c) மகோததி 4. வாய்மை
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
42. பொருத்துக :
(a) புரம் 1. நகரம்
(b) பட்டினம் 2. ஊர்
(c) பாக்கம் 3. நிலம்
(d) புலம் 4. சிற்றூர்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
43. பொருத்துக:
(a) இன்மை 1. வலிமை
(b) திண்மை 2. வறுமை
(c) ஆழி 3. தவம்
(d) நோன்மை 4. கடல்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
44. பொருத்துக:
(a) திருத்தொண்டத்தொகை 1. நம்மாழ்வார்
(b) திருசிற்றம்பலக் கோவையார் 2. திருமங்கை ஆழ்வார்
(c) திருவாய்மொழி 3. சுந்திர மூர்த்தி
(d) திருக்குறுந் தாண்டகம் 4. மணிவாசகர்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
45. பணை என்னும் சொல்லின் பொருள்
(A) புனல்
(B) மேகம்
(C) மூங்கில்
(D) குடை
Answer: (C) மூங்கில்
46. சரியான பொருத்தம் எது?
சொல் – பொருள்
(a) விரை – 1. உடல்
(b) கழல் – 2. பெருகி
(c) ததும்பி – 3. மணம்
(d) மெய் – 4. அணிகலன்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
47. வண்மை என்பதன் பொருள் கூறுக
(A) வண்ணம்
(B) வலிமை
(C) வள்ளல் தன்மை
(D) மெலிவு
Answer: (C) வள்ளல் தன்மை
48. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I – பட்டியல் II
(a) நிலத்துக்கு அழகு – 1. அறம்
(b) குளத்துக்கு அழகு – 2. நெல்லும் கரும்பும்
(c) பெண்ணுக்கு அழகு – 3. தாமரை
(d) மறுமை உலகுக்குச் செல்ல அழகு – 4. நாணம்
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
49. பொருள் கூறு – தண்
(A) தண்ணீர்
(B) குளிர்ச்சி
(C) சோலை
(D) தன்னுடைய
Answer: (B) குளிர்ச்சி
50. நாறுவ என்னும் சொல் தரும் பொருள்
(A) மூத்த
(B) முளைப்ப
(C) நறுமணம்
(D) கெடாமல்
Answer: (B) முளைப்ப
51. பொருத்துக.
(a) அடவி – 1. பெண்யானை
(b) வனப்பு – 2. வலிமை
(c) பிடி – 3. காடு
(d) வீறு 4. அழகு
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
52. சொற்பொருள் பொருத்துக :
(a) பிரசம் – 1. வறுமை
(b) வறன் – 2. தேன்
(c) மதுகை – 3. பெருஞ்செல்வம்
(d) கொழுஞ்சோறு – 4. பெருமிதம்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
53. தொடி, இச்சொல்லின் பொருள்
(A) வயல்
(B) நெல்
(C) வளையல்
(D) உலக்கை
Answer: (C) வளையல்
54. உரிய விடையை தேர்வு செய்க :
(a) தடக்கரி – 1. புலி
(b) உழுவை – 2. சிங்கம்
(c) மடங்கல் – 3. பன்றி
(d) கேழல் – 4. பெரிய யானை
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
55. ஆசிரியருடன் – நூலைப் பொருத்துக.
(a) சுவாமி விபுலானந்தர் – 1. நாடகத்தமிழ்
(b) மறைமலையடிகள் – 2. மதங்க சூளாமணி
(c) பம்மல் சம்பந்தனார் 3. டம்பாச்சாரி விலாசம்
(d) காசி விசுவநாதன் 4. சாகுந்தலம்
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
56. பொருத்துக :
(a) இடர் – 1. நிலவு
(b) நாவாய் – 2. துன்பம்
(c) இறை – 3. படகு
(d) இந்து: – 4. தலைவன்
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
57. பொருத்துக :
(a) செறு – 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. விதை
(d) வட்டி – 4. வயல்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
58. “பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு” இப்பாடல் வரியில் – “பணை’ என்னும் சொல்லின் பொருள் தருக?
(A) முத்து
(B) மரம்
(C) மூங்கில்
(D) காற்று
Answer: (C) மூங்கில்
59. வனப்பு என்னும் சொல்லின் பொருள்
(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) எளிமை
Answer: (A) அழகு
60. சொல்லை பொருளோடு பொருத்துக :
(a) வனப்பு – 1. வலிமை
(b) அடவி – 2. அழகு
(c) வீறு – 3. இனிமை
(d) மதுரம் – 4. காடு
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
61. பொருத்துக:
(a) திரிகடுகம் – 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை – 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு – 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் – 4. முன்றுறை அரையனார்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
62. ‘நவ்வி’ – இச்சொல்லின் பொருளை எழுதுக:
(A) மான்
(B) நாய்
(C) புலி
(D) பசு
Answer: (A) மான்
63. பொருத்துக:
(a) திருவரங்கம் – 1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம் – 2. ஸ்ரீரங்கம்
(c) திருமறைக்காடு – 3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி – 4. வேதாரணியம்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
64. “கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(A) எருமை
(B) புலி
(C) கரடி
(D) பன்றி
Answer: (D) பன்றி
65. பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் -1. இருள்
(b) இந்து – 2. புன்னகை
(c) முறுவல் – 3. கண்கள்
(d) அல் – 4. நிலவு
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
66. உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக:
புரிசை
(A) வேகம்
(B) வளம்
(C) மதில்
(D) மேகம்
Answer: (C) மதில்
67. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
“உருமு”
(A) இடுப்பு
(B) இடி
(C) மேகம்
(D) கதிரொளி
Answer: (B) இடி
68. சொல்லிற்கு ஏற்ற பொருளை பொருத்தி எழுதுக:
(a) ஆய காலை – 1. திரட்சி
(b) திரள் – 2. வேடர்
(c) எயினர் – 3. படகு
(d) நாவாய் – 4. அந்த நேரத்தில்
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
69. சரியான பொருளைக் கண்டறிக
“பருவரல்”
(A) குகை
(B) துன்பம்
(C) தூக்கம்
(D) இன்பம்
Answer: (B) துன்பம்
70. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பதில் “பொறை’ என்ற சொல் குறிப்பிடும் பண்பு
(A) கோபம்
(B) அன்பு
(C) மகிழ்ச்சி
(D) பொறுமை
Answer: (D) பொறுமை
71. ‘கதம்’ என்ற சொல்லின் பொருள்
(A) சினம்
(B) சீதனம்
(C) இசை
(D) அளவு
Answer: (A) சினம்
72. “வதுவை”- என்ற சொல்லின் பொருள்
(A) திருமணம்
(B) மறுமணம்
(C) நறுமண்ம்
(D) மணம்
Answer: (A) திருமணம்
73. சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் – பொருள்
(a) வனப்பு – 1. காடு
(b) அடவி – 2. பக்கம்
(c) மருங்கு – 3. இனிமை
(d) மதுரம் – 4. அழகு
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
74. கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்’ எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக
(A) ஞாயிறு
(B) பகலவன்
(C) பிரமன்
(D) ஆதவன்
Answer: (C) பிரமன்
75. பொருத்துக:
(a) அடவி – 1. மான்
(b) நவ்வி – 2. சிலுவை
(c) விசும்பு – 3. காடு
(d) குருசு – 4. வானம்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
76. கடிகை என்பதன் பொருள் யாது?
(A) அணிகலன்
(B) கடித்தல்
(C) கடுகு
(D) காரம்
Answer: (A) அணிகலன்
77. “செறு’ என்பதன் பொருள்
(A) செருக்கு
(B) சேறு
(C) சோறு
(D) வயல்
Answer: (D) வயல்
78. பொருத்துக:
(a) சிந்தை – 1. நீர்
(b) நவ்லி – 2. மேகம்
(c) முகில் – 3. எண்ணம்
(d) புனல் – 4. மான்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
79. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது_ யைக் குறிக்கும்.
(A) சிங்கம்
(B) கடல்
(C) மாலை
(D) சந்தனம்
Answer: (B) கடல்
80. பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
(a) ஒழுக்கத்தின் எய்துவர் – 1. செல்வம் நிலைக்காது
(b) இழுக்கத்தின் எய்துவர் – 2. மேன்மை
(c) பொறாமை உடையவரிடம் – 3. உயர்வு இருக்காது
(d) ஒழுக்கமில்லாதவரிடம் – 4. எய்தாப் பழி
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
81. “மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்
(A) மடக்குதல்
(B) புலி
(C) மடங்குதல்
(D) சிங்கம்
Answer: (D) சிங்கம்
82. அங்காப்பு என்பதன் பொருள்
(A) சலிப்படைதல்
(B) வாயைத் திறத்தல்
(C) அலட்டிக் கொள்ளுதல்
(D) வளைகாப்பு
Answer: (B) வாயைத் திறத்தல்
83. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்குரிய சரியான பொருள் எது?
‘கவிகை’
(A) தேவருலகம்
(B) கவிதை
(C) பாட்டு
(D) குடை
Answer: (D) குடை
84. “வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்
(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) ஆளுமை
Answer: (A) அழகு
85. சரியான விடையை தேர்வு செய்
சொல் – பொருள்
(a) விசும்பு – 1. தந்தம்
(b) துலை – 2. யானை
(c) மருப்பு – 3. துலாக்கோல்
(d) களிறு – 4. வானம்
Answer: (a)4, (b)3, (c)1, (d)2
86. சுருதிமுதல் – என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது?
(A) யூதர்
(B) இயேசு நாதர்
(C) சீடர்
(D) குற்றவாளி
Answer: (B) இயேசு நாதர்
87. பொருத்துக:
(a) வைதருப்பம் – 1. மதுரகவி
(b) கெளடம் – 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் – 3. வித்தாரகவி
(d) மாகதம் – 4. சித்திரகவி
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
88. பொருத்துக :
(a) மேதி – 1. சிவன்
(b) சந்தம் – 2. எருமை
(c) கோதில் – 3. அழகு
(d) அங்கணர் – 4. குற்றமில்லாத
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
89. பொருள் தருக
‘மயரி’
(A) உறக்கம்
(B) தயக்கம்
(C) மயக்கம்
(D) கலக்கம்
Answer: (C) மயக்கம்
90. சரியானவற்றை பொருத்துக:
(a) கான் – 1. கரடி
(b) உழுவை – 2. சிங்கம்
(c) மடங்கல் – 3. புலி
(d) எண்கு – 4. காடு
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
91. பொருத்துக:
(a) விபுதர் – 1. அந்தணன்
(b) பனவன் – 2. இரவு
(c) வேணி – 3. புலவர்
(d) அல்கு – 4. செஞ்சடை
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
92. மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
(A) உயிர்
(B) கழுத்து
(C) வாய்
(D) மார்பு
Answer: (D) மார்பு
93. “கடம்” என்ற சொல்லின் பொருள்
(A) முகம்
(B) கைகள்
(C) உடம்பு
(D) இடுப்பு
Answer: (C) உடம்பு
94. அகத்துறுப்பு என்பது
(A) பல்
(B) மனத்தின் உறுப்பு அன்பு
(C) இதயம்
(D) வயிறு
Answer: (B) மனத்தின் உறுப்பு அன்பு
95. பொருத்துக:
(a) ஒப்புரவு – 1. சான்றாண்மை
(b) சால்பு – 2. உதவுதல்
(c) மாற்றார் – 3. உரைகல்
(d) கட்டளை – 4. பகைவர்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
96. ‘விச்ம்பு’ என்னும் சொல்லின் பொருள்
(A) ஆகாயம்
(B) துளி
(C) மழைத்துளி
(D) மேகம்
Answer: (A) ஆகாயம்
97. பொருத்துக: தாவர உறுப்புப் பெயர்கள்
(a) மூங்கில் – 1. தாள்
(b) வேப்பம் – 2. கூந்தல்
(c). கமுகம் – 3. தழை
(d) நெல்- 4. இலை
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
98. பொருத்துக :
(a) டால்ஸ்டாய் -1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்
(b) பெட்ரண்ட் ரஸ்ஸல் – 2. கிரேக்க சிந்தனையாளர்
(c) கிருபாளினி – 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
(d) பிளேட்டோ – 4. சிந்தனையாளர் கல்வியாளர்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
99. பொருத்துக:
(a) விசும்பு – 1. தந்தம்
(b) துலை – 2. நெருப்பு
(c) மருப்பு – 3. துலாக்கோல்
(d) கனல் – 4. வானம்
Answer: (a)4, (b)3, (c)1, (d)2
100. பொருத்துக:
(a) வட்டி – 1. எருமை
(b) யாணர் – 2. பவளம்
(c) துகிர் – 3. பனையோலைப்பெட்டி
(d) மேதி – 4. புதுவருவாய்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
101. பொருத்துக:
(a) புள் – 1. எருமை
(b) நுதல் – 2. துன்பம்
(c) மேதி – 3. பறவை
(d) நடலை – 4. நெற்றி
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
102. ‘ஐ’ என்பதன் பொருள்
(A) கண்
(B) நான்
(C) அழகு
(D) அம்பு
Answer: (C) அழகு
103. தென்னம் பொருப்பு என்பது
(A) பொதிகை மலை
(B) மேரு மலை
(C) கழுகு மலை
(D) நீல மலை
Answer: (A) பொதிகை மலை
104. ‘அளை’ என்ற சொல்லின் பொருள்.
(A) ஒலி
(B) கூப்பிடு
(C) கொடு
(D) புற்று
Answer: (D) புற்று
105. சரியான பொருள் தருக.
“ஆயம்”
(A) செவிலியர் கூட்டம்
(B) பாணன் கூட்டம்
(C) தோழியர் கூட்டம்
(D) அனைத்தும்
Answer: (C) தோழியர் கூட்டம்
106. பொருள் தருக.
சதுரங்கச்சேனை
(A) யானைப் படை
(B) குதிரைப் படை
(C) தோப் படை
(D) நால்வகைப் படை
Answer: (D) நால்வகைப் படை
107. ‘சூலை’ என்பது
(A) கண் நோய்
(B) வயிற்று நோய்
(C) இதய நோய்
(D) கழுத்து நோய்
Answer: (B) வயிற்று நோய்
108. பொருத்துக:
(a) அரி – 1. பனையோலைப்பெட்டி
(b) செறு – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. வயல்
(d) வட்டி – 4. நெற்கதிர்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
109. ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள்
(A) மான்
(B) நாய்
(C) நரி
(D) செந்நாய்
Answer: (A) மான்
110. பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு – 1. பத்துவகைக் குற்றங்களின் பயன்
(b) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்று – 2. பத்தின் நீங்கித் தானம், சீலம், தாங்குவது
(c) தீவினை என்பது – 3. மனப்பேரின்பமும், கவலையும் வாட்டும்
(d) நல்வினை என்பது – 4. அலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
111. பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) டெலிகேட் – 1. கருத்துரு
(b) சாம்பியன் – 2. மரபுத்தகவு
(c) புரபோசல் – 3. பேராளர்
(d) புரோட்டோகால் – 4. வாகைசூடி
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
112. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று – பட்டியல் இரண்டு
(a) சரதம் – 1. நிலா முற்றம்
(b) சூளிகை – 2. நாடு
(c) மகோததி – 3. வாய்மை
(d) அவளி – 4. கடல்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
113. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று – பட்டியல் இரண்டு
(a) கோக்கோதை நாடு – 1. பறவை இனம்
(b) பார்ப்பு – 2. சேற்று வயல்
(c) புள்ளினம் – 3. சேர நாடு
(d) அள்ளற் பழனம் – 4. குஞ்சு
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
114. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று – பட்டியல் இரண்டு
(a) வாலை – 1. தயிர்
(b) உளை – 2. சுரபுன்னை மரம்
(c) விளை – 3. இளம்பெண்
(d) வழை – 4. பிடரிமயிர்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
115. பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I – பட்டியல் II
(a) கொண்டல் – 1. மாலை
(b) தாமம் – 2. வளம்
(c) புரிசை – 3. மேகம்
(d) மல்லல் – 4. மதில்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
116. பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் _ என்பதாகும்?
(A) கரடி
(B) யானை
(C) முதலை
(D) பாம்பு
Answer: (D) பாம்பு
117. பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள் – 1. நட்சத்திரம்
(b) வேந்தர் – 2. ஆகாயம்
(c) வானம் – 3. மாதம்
(d) விண்மீன் – 4. அரசர்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
118. கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக:
(A) துடிப்பு – கோமகன்
(B) அனுமதி – ஜெயகாந்தன்
(C) ஆளுகை – டாக்டர் சி.என். அண்ணாதுரை
(D) சோணாசலம் – சுஜாதா
Answer: (A) துடிப்பு – கோமகன்
119. ‘தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்’ – இதில்: ‘அல்கு’ என்பதன் பொருள்
(A) மருள்
(B) இருள்
(C) உருள்
(D) திரள்
Answer: (B) இருள்
120. பொருத்துக:
பொருத்தமான இடைநிலையைத் தேர்க.
(a) வருவான் – 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் – 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் – 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் – 4. எதிர்மறை இடைநிலை
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
121. சரியானவற்றை தெரிந்து எழுதுக:
(A) புதுமைப்பித்தன் – அக்கரை பச்சை
(B) முல்லை சக்தி – வெள்ளி இரவு
(C) டாக்டர் மூ. வரதராசன் – கொலு பொம்மை
(D) ஜீவா – பொன்னகரம்
Answer: (B) முல்லை சக்தி – வெள்ளி இரவு
122. பொருத்துதல் : பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(a) இகல் – 1. செல்வம்
(b) திரு – 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் – 3. துன்பம்
(d) இடும்பை – 4. பகை
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
123. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக:
(a) அம்பி – 1. குஞ்சி
(b) அல் – 2. பறை
(c) துடி – 3. இருள்
(d) தலைமுடி – 4. படகு
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
124. பொருளறிந்து பொருத்துக
சொல் – பொருள்
(a) கலாபம் – 1. கிளி
(b) விவேகன் – 2. பொய்கை
(c) வாவி – 3. ஞானி
(d) அஞ்சுகம் – 4. தோகை
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
125. ‘உதவு’ – என்ற சொல்லின் சரியான பொருள் உணர்த்தும் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) உழைப்பின்றி உயர்வில்லை
(B) உயர்ந்தோரை உலகு மதிக்கும்
(C) உயர்வே மதிப்பைத் தரும்
(D) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்
Answer: (D) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்
126. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
(A) நிலம்
(B) மலை
(C) காடு
(D) நாடு
Answer: (B) மலை
127. பொருள் தேர்க:
அங்காப்பு – என்பது
(A) வாயைப் பிளத்தல்
(B) அங்கம் காப்பு
(C) அகம் காத்தல்
(D) வாயைத் திறத்தல்
Answer: (D) வாயைத் திறத்தல்
128. இதழ், நா, பல், அண்ணம் – இவை
(A) ஒலி பிறப்புகள்
(B) ஒலிப்பு முறைகள்
(C) ஒலிப்பான்கள்
(D) ஒலிப்பு முனைகள்
Answer: (D) ஒலிப்பு முனைகள்
129. பொருத்துக : – சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் – பொருள்
(a) விசும்பு – 1. தந்தம்
(b) மருப்பு – 2. பானம்
(c) கனல் – 3. யானை
(d) களிறு – 4. நெருப்பு
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
130. “தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” – இத்தொடரில் ‘திண்டிறல்’ என்னும் சொல்லிற்கு ‘
(A) கொடுமையான
(B) கடுமையான
(B) எடுப்பான்
(D) உறுதியான
Answer: (D) உறுதியான
131. பொருளறிந்து பொருத்துக.
சொல் – பொருள்
(a) வைதருப்பம் – 1. சித்திரகவி
(b) கெளடம் – 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் – 3. வித்தாரகவி
(d) மாகதம் – 4. மதுரகவி
Answer: (a)2, (b)4, (c)1, (d)3
132. பொருத்துக
(a) மேதி – 1. அன்னம்
(b) புள் – 2. அலை
(c) காசினி – 3. எருமை
(d) திரை – 4. நிலம்
Answer: (a)3, (b)1, (c)4, (d)2
133. பொருத்துக:
சொல் – பொருள்
(a) களபம் – 1. அம்பு
(b) புயம் – 2. பெயர்
(c) நாமம் – 3. சந்தனம்
(d) பகழி – 4. தோள்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
134. பொருத்துக:
(a) தொண்டை மண்டல சதகம் – 1. வண்ணக்களஞ்சியப் புலவர்
(b) பிரபுலிங்க லீலை – 2. முகமது உசைன் புலவர்
(c) முகையதீன் புராணம் – 3. படிக்காசுப் புலவர்
(d) பெண் புத்தி மாலை – 4. சிவப்பிரகாச சுவாமிகள்
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
135. பட்டியல் I-ல் உள்ள சொற்களைப் பட்டியல் IIல் உள்ள சொற்பொருளறிந்து குறிமீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
I – சொல் – II பொருள்
(a) கேசரி – 1. துன்பம்
(b) பூதரம் – 2. குடை
(c) கவிகை – 3. மலை
(d) இடர் – 4. சிங்கம்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
136. தேன்கலந்து பால்கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இப்பாடலடியில் ஊன் – இணையான தமிழ்ச்சொல் எழுது.
(A) உணவு
(B) பிணவு
(C) நிணம்
(D) குணம்
Answer: (C) நிணம்
137. ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள்.
(A) தூய்மையானவர்
(B) வஞ்சகர்
(C) மென்மையானவர்
(D) கடுமையானவர்
Answer: (B) வஞ்சகர்
138. சொல்லும் பொருளும் பொருத்துக:
(a) கா – 1. பெருமை
(b) கூ – 2. செயல்
(c) கை – 3. நிலம்
(d) கோ – 4. காப்பாற்று
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
139. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு:
வெற்பு – வெட்பு
(A) கல் – சும்மா
(B) மலை – சூடு
(C) நோய் – மலை
(D) வெறுப்பு – விருப்பு
Answer: (B) மலை – சூடு
140. பொருத்துக.
(a) இடர் – 1. நிலவு
(b) நாவாய் – 2. துன்பம்
(c) இறை – 3. படகு
(d) இந்து – 4. தலைவன்
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
141. பொருத்துக.
பட்டியல் I – பட்டியல் II
(a) அம்பி – 1. இருள்
(b) துடி – 2. படகு
(c) திரை – 3. பறை
(d) அல் – 4. அலை
Answer: (a)2, (b)3, (c)4, (d)1
142. பொருத்துக.
சொல் – பொருள்
(a) செறு – 1. பவளம்
(b) சந்தம் – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. அழகு
(d) துகிர் – 4. வயல்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
143. பொருத்துக.
சொல் – பொருள்
(a) தாமம் – பன்றி
(b) ஓதி – மலை
(c) வெற்பு – கூந்தல்
(d) கேழல் – பெயர்
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
144. பொருத்துக.
சொல் – பொருள்
(a) மிடிமை – 1. திருமணம்
(b) உரவு – 2. வயது
(c) வதுவை – 3. வறுமை
(d) அகவை – 4. வலிமை
Answer: (a)3, (b)4, (c)1, (d)2
145. பொருத்துக.
சொல் – பொருள்
(a) சிலை – 1. கவலை
(b) பையுள் – 2. வில்
(c) பீடு – 3. வெற்றி
(d) விறல் – 4. பெருமை
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
146. பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
(a) பேதையர் நட்பு – 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு – 3. நலில் தோறும்
(d). இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை
Answer: (a)4, (b)3, (c)2, (d)1
147. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
(A) அன்பு காட்டுதல்
(B) ஆறுதல் கூறுதல்
(C) வழிகாட்டுதல்
(D) ஆதரவு தருதல்
Answer: (C) வழிகாட்டுதல்
148. பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I – பட்டியல் II
(a) புள் – 1. விரைவு
(b) குலவு – 2. கலப்பை
(c) மேழி – 3. அன்னம்
(d) ஒல்லை – 4. விளங்கும்
Answer: (a)3, (b)4, (c)2, (d)1
149. சரியான பொருள் தருக :
“இந்து’
(A) நிலவு
(B) துன்பம்
(C) படகு
(D) தலைவன்
Answer: (A) நிலவு
150. கோடிட்ட இடத்தை நிரப்புக:
“ஞால்’ என்பதற்கு ___ என்பது பொருள்.
(A) தொங்குதல்
(B) ஞாலம்
(C) தொடங்குதல்
(D) வாழுதல்
Answer: (A) தொங்குதல்
151. “மருகி’ என்பது யாரைக் குறிக்கும்?
(A) மருமகள்
(B) மகள்
(C) கொழுந்தி
(D) மாமியார்
Answer: (A) மருமகள்
152. பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் சேர்ந்தெடு.
பட்டி யல் I – பட்டியல் II
(a) தாய்மொழி வழியாகக் – 1. தமிழில் படித்தேன்
(b) நான் தாய்மொழித் – 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
(c) தமிழர் தமிழறிந்தாரிடம் – 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்
(d) நாம் பிறமொழியில் – 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது
Answer: (a)4, (b)1, (c)2, (d)3
153. பட்டியல் Iல் உள்ள சொல்லை பட்டியல் IIல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I – சொல் – பட்டியல் II – பொருள்
கிழக்கு – 1. விதந்து கூறுதல்
கிளத்தல் – 2. கீழ்த்திசை
கிழத்தி – 3. கிளர்ச்சி
கிளப்பம் – 4. உரியவன்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
154. குன்று தூவ எறியும் அரவம் போல முரக எழுந்து இறங்கும்
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக
(A) ஓசை
(B) குரல்
(C) மொழி
(D) புகழ்
Answer: (A) ஓசை
155. பட்டியல் I-ல் உள்ள சொல்லை பட்டியல் -IIல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தோந்தெடு.
சொல் – பொருள்
(a) ஆழல் – 1. அரசு புரிதல்
(b) ஆளுதல் – 2. கறையான்
(c) ஆழி – 3. சிங்கம்
(d) ஆளி – 4. கடல்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
156. பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்.
சொல் – பொருள்
(a) கமலம் – 1. வளமான
(b) ஒல்லை – 2. பாம்பு
(c) மல்லல் – 3. விரைவு
(d) அரவு – 4. தாமரை
Answer: (a)4, (b)3, (c)1, (d)2
157. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
சொல் – பொருள்
(a) மழவன் – 1. இளைஞன்
(b) மள்ளன் – 2. வீரன்
(c) மழுங்குதல் – 3. குறைதல்
(d) மள்குதல் – 4. கெடுதல்
Answer: (a)2, (b)1, (c)4, (d)3
158. பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளை ஆய்ந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்.
பட்டியல் I சொல் – பட்டியல் II பொருள்
(a) மாயோன் – 1. உன்னிடம்
(b) மடங்கல் – 2. குற்றம்
(c) நின்வயின் – 3. இயமனின் ஏவலன்
(d) செயிர் – 4. கருநிறமுடையவன்
Answer: (a)4, (b)3, (c)1, (d)2
159. கடன்பட்டார் நெஞ்சம் போல் _
(A) மகிழ்ச்சி
(B) இன்பம்
(C) கலக்கம்
(D) துன்பமின்மை
Answer: (C) கலக்கம்
160. “பகலவனைக் கண்ட பனி போலாயிற்று துன்பம்” ______
(A) வீழ்ந்தது
(B) மறைந்தது
(C) உடன் நீங்கியது
(D) கலந்தது
Answer: (C) உடன் நீங்கியது
161. பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் IIல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
சொல் – பொருள்
- பொலம் ௮. இரக்கம்
2, வோல் ஆ. ஆழகு - நொய்மை இ. மூங்கில்
- செந்தண்மை ஈ. மென்மை
Answer: (1)ஆ, (2)இ, (3)ஈ, (4)அ
162. பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
- பை – ௮. நுரை
- பூ – ஆ. அளவு
- பே – இ. கூர்மை
- மா – ஈ. பாம்பின் படம்
Answer: (1)ஈ, (2)இ, (3)அ, (4)ஆ
163. பட்டியல் Iல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
தாவரம் – உறுப்பு
- தாழை – அ. ஓலை
- மா – ஆ. மடல்
- வேப்பம் – இ. இலை
- தென்னை – ஈ. தழை
Answer: (1)ஆ, (2)இ, (3)ஈ, (4)அ
164. பட்டியல் Iல் உள்ள சொற்களை பட்டியல் IIல் உள்ள சொற்பொருளறித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
சொல் – பொருள்
- நட்டோர் – ௮. அருகில்
- நணி – ஆ. படுக்கை
- பாயல் – இ. வலிமை
- மதுகை – ஈ. நண்பர்
Answer: (1)ஈ, (2)அ, (3)ஆ, (4)இ
165. பட்டியல் Iல் உள்ள சொற்களை பட்டியல் IIல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
சொல் – பொருள்
- புயல் – ௮. உணவு
- புரை – ஆ. வஞ்சனை
- சலம் – இ. குற்றம்
- துப்பு – ஈ. மேகம்.
Answer: (1)ஈ, (2)இ, (3)ஆ, (4)அ
166. பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் 1 – பட்டியல் 11
சொல் – பொருள்
- கணம் – ௮. வருந்துதல்
- மொய்ம்பு – ஆ. விருப்பம்
- அலமரல் – இ. வலிமை
- வேள் – ஈ. கூட்டம்.
Answer: (1)ஈ, (2)இ, (3)அ, (4)ஆ
167. பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் IIல் உள்ள சொற்பொருளநிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
சொல் – பொருள்
- சோமன் – ௮. பொன்
- காணம் – ஆ. சினம்
- முனிவு – இ. பெருமை
4, விழுப்பம் – ஈ. சந்திரன்.
Answer: (1)ஈ, (2)அ, (3)ஆ, (4)இ
🔻🔻🔻
No comments:
Post a Comment