இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி சில மாதங்களுக்கு கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்க போகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அருமையான கோடை கால பழங்களை நாம் அடிக்கடி சாப்பிட வேண்டும். இந்தியாவில் சிறந்த 20 கோடை கால பழங்களையும் அதன் சிறப்புகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
தர்பூசணி :சிறந்த கோடைகால பழமான தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர்தான் உள்ளது. மேலும் இதில் உடல் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. அதுமட்டுமின்றி தர்பூசணி பழத்தில் வைட்டமின் பி, சி வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.
மாம்பழம் : ஆரோக்கிய கலோரிகள் அதிகம் நிறைந்த மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. அதனால்தான் மாம்பழத்தை பழங்களின் ராஜா என அழைக்கிறார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் நாள்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது; செல் பாதிப்பை தடுத்து இளமை தோற்றத்தை தருகிறது.
கிர்ணி பழம் : பார்ப்பதற்கு தர்பூசணி போலவே இருந்தாலும், கிர்ணி பழமும் சிறந்த கோடைகால பழமாகும். இந்தப் பழத்திலும் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதோடு வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மாக்னீசியம் ஆகியவைவும் உள்ளது. பல ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் நிறைந்த கிர்ணி பழத்தை ஜூஸாகவோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோ சாப்பிடலாம்.
கிவி பழம் : செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கும் கிவி பழம் உதவியாக இருக்கிறது. கோடை கலத்தில் அதிகமாக வியர்ப்பதால் நம் உடலில் உள்ள தாதுக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடும். இதை ஈடுகட்ட கிவி பழம் உதவியாக இருக்கும்
ஆரஞ்சு பழம் : 80 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ள ஆரஞ்சு பழம், கோடை வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கிறது. மேலும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
பப்பாளி : பப்பாளி பழத்தில் உள்ள பப்பாய்ன் மற்றும் சைமோபப்பாய்ன் என்ற நொதிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
அன்னாசி பழம் : வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ பி1, வைட்டமின் ஏ பி2, வைட்டமின் ஏ பி3, வைட்டமின் ஏ பி6, துத்தநாகம், மாக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் அன்னாசி பழத்தில் நிறையவே உள்ளது.
கொய்யா பழம் : நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் கரோடின் போன்ற சத்துகள் கொய்யா பழத்தில் உள்ளது. மேலும் இது இருமலை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
ப்ளம்ஸ் : ப்ளம்ஸில் கரோடினாய்டு மற்றும் பீனோலிக் ஆசிட் போன்ற பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தி நியாபக சக்தியை மேம்படுத்துகிறது.
லிச்சி பழம் : லிச்சி பழத்தை அப்படியே செடியில் இருந்து பறித்து சாப்பிடலாம். இதில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பாலிபீனால் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி : கோடை காலத்தில் வரும் சருமப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது.
திராட்சை : மிக எளிதாக கிடைக்கும் திராட்சையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டும் பாலிபீனாலும் நிறைந்துள்ளது. இது நம் மூளை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மிகவும் நல்லது.
அத்திப்பழம் : இயற்கையாக சர்க்கரை நிறம்பியுள்ள அத்திப்பழம் நமக்கு உடனடியான ஆற்றலை தருகிறது. கோடை வெப்பத்தில் நம் உடலில் அடிக்கடி நீர்சத்து குறைந்து போவதை தடுத்து, உடலுக்கு பொட்டாசியம், கால்சியம் மற்றும் மாக்னீசியம் சத்தை தருகிறது.
வாழைப்பழம் : இது கோடைகால பழம் இல்லையென்றாலும், உடலில் இழந்த ஆற்றலை திருப்பிக்கொடுக்கும் சக்தி வாழைப்பழத்திற்கு உள்ளது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குவதில் வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.
ஆப்ரிகாட் பழம் : சுவைமிகுந்த ஆப்ரிகாட் பழத்தில் நம் கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்டா கரோடின் அதிகளவு உள்ளது.
பீச் பழம்: நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது பீச் பழம். கோடை வெயிலில் நம் உடலில் வெளியேறும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை திரும்பவும் கிடைக்க இந்தப் பழம் உதவுகிறது
ஸ்டார் பழம் : பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த ஸ்டார் பழம், நம் கண்களை இதமாக்கி தலைவலியை போக்குகிறது.
வில்வ பழம் : மாம்பழம், லிச்சிக்குப் பிறகு கோடை காலத்தில் இந்தியாவில் பொதுவாக கிடைக்கும் இன்னொரு பழம் வில்வம். குளிர்ச்சி நிறைந்த இந்தப் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதோடு நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
எலுமிச்சை : மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் எலுமிச்சையில் பொட்டாசியமும் வைட்டமினும் அதிகளவு உள்ளது. முக்கியமாக கோடை காலத்தில் சிறந்த பானமாக லெமன் ஜுஸ் உள்ளது.
வெள்ளரிக்காய் : கோடை காலத்தின் சிறந்த பழமான வெள்ளரிக்காயில் அதிகமான நீர்ச்சத்தும் பொட்டாசியமும் உள்ளது. கோடை கால்லத்தில் இந்திய முழுதும் உள்ள மக்களால் வெள்ளரிக்காய் விரும்பி உண்ணப்படுகிறது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment