இந்த உணவுகளை எடுத்துகொண்டால்,
நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால்,
முக்கிய நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
பூண்டு
இதில் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இதில் சல்பர் உள்ளது. அலிசின் உள்ளது. இவை
பேக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். மேலும் நுண்ணியிரிகளை எதிர்க்கும் திறன்
கொண்டது. இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாம் எடுத்து கொண்டால், இது இயற்கையான
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெங்காயம்
பூண்டு போலவே இதில்
இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுள்ளது. இதில்
க்யூயர்சிடின் உள்ளது, இது சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது,
வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. வீக்கத்திற்கு எதிராக, வைரஸ் தாக்கத்தை
கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தேங்காய்
இதில் லயுரிக் ஆசிட்
உள்ளது, இவை நுண்ணியிரிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் வைரஸ்
தாக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள பேட்டி ஆசிட், நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முள்ளங்கி
இதில் வைட்டமின் சி,
ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இவை வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யும். நோய்
கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும். குளுக்கோசினோலேட்ஸ் உள்ளது, இவை
வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.
🔻 🔻 🔻
0 Comments:
Post a Comment