நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 490 இளநிலை நிர்வாகி (Junior Executive) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் மே மாதம் 1ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்:
Junior Executive (Architecture) - 03
Junior Executive (Engineering - civil ) - 90
Junior Executive (Engineering - Electrical) - 106
Junior Executive (Electronics) - 278
Junior Executive (Information Technology) - 13
கல்வித் தகுதிகள்:
தேர்வு முறை(Selection Procedure) : தொடர்புடைய பாடங்களில், 2024ம் வருட கேட் தேர்வு மதிப்பெண் (GATE SCORE 2024) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து பதவிகளுக்கும், இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம், கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ. 40,000 - ரூ. 1,40,000
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர், பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் வயது வரம்பு 01/05/2024 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. www.aai.aero என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆட்சேர்க்கை அறிவிக்கையை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment