சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 41 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

April 1, 2024

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 41 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) மேற்பார்வை பொறியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02.04.2024

Superintending Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை : 40

Civil - 3 

Chemistry - 3 

Computer Science - 1 

Mechanical - 11 

ECE - 2 

E&I - 12 

EE - 2 

Biology / Life Science - 1 

Biotechnology - 1 

Biomedical - 1 

Zoology - 1 

Physics – 2

கல்வித் தகுதி: Diploma in Engineering/Bachelor’s Degree in Science படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruit.iitm.ac.in. என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/R224_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment