இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் எப்படியாவது பணிபுரிய வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டவர்களுக்கான சூப்பர் சான்ஸை Accenture நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
ஐடி துறை வேலைவாய்ப்பு:
ஐடி நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதை தனது கனவாக லட்சியமாக கொண்ட நபர்களுக்கான சூப்பர் அறிவிப்பை பிரபல ஐடி நிறுவனமான Accenture ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர் (Application Tech Support Practitioner) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இப்பணிக்கான பல்வேறு காலியிடங்களுக்கு இளங்கலை பட்டம் பெற்ற ITIL Technical சான்றிதழ் வைத்து இருப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மைக்ரோசாப்ட் வின்டோஸ் டெஸ்க்டாப் மேனேஜ்மென்ட்,எஸ்சிசிஎம், பவர் ஷெல் ஸ்கிரிப்டிங்கில் போன்றவற்றில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பணியின் போது மாதம் 50,000 ரூபாய் வீதம் ரூ.6 லட்சம் ஆண்டு ஊதியமாக தரப்படவுள்ளது. இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
No comments:
Post a Comment