சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர், ஓட்டுனர், இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Grade Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400
Junior Grade Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500
Translator/Interpreter
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தெலுங்கு அல்லது மலையாளம் பாடத்துடன்
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500
Junior Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 23
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
Typist
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
MTS
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
வயதுத் தகுதி : 01.01.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள்
இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில்
தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப்
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து,
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: THE REGISTRAR GENERAL, HIGH COURT OF MADRAS,
CHENNAI – 600104.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.04.2024
விண்ணப்பக் கட்டணம்: டிரைவர், பன்முக உதவியாளர்
பணியிடங்களுக்கு ரூ 500, பிற பணியிடங்களுக்கு ரூ. 750;
எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்
கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment