இரவு முழுவதும் ஏசி பயன்படுத்தினால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும்..? மருத்துவர் விளக்கம்.! - Agri Info

Adding Green to your Life

April 14, 2024

இரவு முழுவதும் ஏசி பயன்படுத்தினால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும்..? மருத்துவர் விளக்கம்.!

 அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்க இருக்கிறது. ஏசி வசதி உள்ளவர்களுக்கு இந்த கோடையில் ஏர் கண்டிஷனர்தான் நம்பிக்கை. காலை, மதியம், இரவு என ஏசியை ஆன் செய்து பலர் வெப்பத்தின் வெக்கையை தனித்துக்கொள்கின்றனர்.

ஏசி யூனிட் உங்கள் அறையில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி அதே நேரத்தில் குளிர்ந்த காற்றை நிரப்பும். வீட்டை விரைவாக குளிர்விக்க ஏர் கண்டிஷனர் சிறந்த வழியாகும்.

ஆனால் கடுமையான வெப்பம் தூக்கத்தில் குறுக்கிடுவது போல், தூங்கும் போது ஏசியை ஆன் செய்து வீட்டை குளிர்விப்பது குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது ”இரவு முழுவதும் ஏசியை இயக்காமல் இருந்தால் மின்சாரக் கட்டணம் குறையும், மேலும் உடல் உபாதைகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்” என்கிறார் நுரையீரல் சுகாதார மற்றும் ஆரோக்கிய இயக்குனர் கிறிஸ்டின் கிங்ஸ்லி விளக்குகிறார்.

நீங்கள் இரவில் தூங்கும்போது, ​​உங்கள் உடல் வெப்பநிலை குறையும். இது நல்ல தூக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.ஏசியை ஆன் செய்து கொண்டு தூங்குவது உடலுக்கு நல்லதல்ல. இது முழு தூக்கத்துக்கு கொண்டு செல்லாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் போது ஏசியை இயக்குவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தூசிப் பூச்சிகள் மற்றும் பிற ஒவ்வாமைகளை அறைக்குள் கொண்டு கொண்டு வரும். இது காற்றை உலர்த்தி, அடைப்பை உண்டாக்கும்.

ஏசியை ஆன் செய்து தூங்கினால், நீரிழப்பு ஏற்பட்டு தூக்கத்திற்கு இடையில் அடிக்கடி எழுந்திருக்க் வேண்டியிருக்கும். ஏசி காற்றை உலர்த்துவதால் தொண்டை, வாய், நுரையீரல் மற்றும் கண்கள் வறட்சியும் ஏற்படலாம். இதன் விளைவாக, சுவாச பிரச்சனைகளை பிற்காலத்தில் அனுபவிக்கக் கூடும்.இரவில் ஏர் கண்டிஷனரை ஆஃப் செய்வதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம், இதன் விளைவாக மின்சாரக் கட்டணம் குறையும்.

இரவில் தூங்குவதற்கு மிகவும் பொருத்தமான வெப்பநிலை எது? வெப்பநிலை சுமார் 72-75 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்படி உங்கள் தெர்மோஸ்டாட்டை அமைக்கவும், அது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.



🔻 🔻 🔻 

No comments:

Post a Comment