நாட்டில் கோடை காலம் துவங்கி இருக்கும் நிலையில் பல பகுதிகளில் காலை முதல் மாலை வரை இப்போதே வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் அனைவரும் உடநலனை வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது
வெயில் காரணமாக கொட்டும் வியர்வை, ஏற்படும் ரேஷஸ் மற்றும் அதிகரிக்கும் உடல் சூடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வெயில் காலத்தில் நம்முடைய ஃபிட்னஸிற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்களின் வழக்கமான ஒர்கவுட்ஸ் மற்றும் டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். அது என்னவென்றால் ஒவ்வொரு சீசனிலும் நமது உடலின் தேவைகள் மாறுகின்றன. எனவே உங்களின் வழக்கமான டயட் மற்றும் ஒர்கவுட்ஸ் கோடை காலத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். எனவே இந்த கடும் கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.
கோடை கால டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் :
மற்ற சீசன்களை விட வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை மிக வேகமாக இழப்போம். எனவே உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைத்திருக்கவும், ஹைட்ரேட்டாக இருக்கவும் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் காரணமாக நீர்ச்சத்து மிக்க, உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய மற்றும் தேவையான வைட்டமின்ஸ் & மினரல்ஸ் நிறைந்த உணவுகளை உங்களின் கோடை காலா டயட்டில் சேர்க்க வேண்டும்.
தயிர்: பிளெயின், அன்ஸ்வீட்டன்ட் தயிரானது ஒரு சக்திவாய்ந்த ப்ரோபயாடிக் ஆகும். இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தியாவின் பல கடலோர மாநிலங்களில் தயிர் சாதம் முக்கிய உணவாக இருக்கிறது.
இளநீர்: இயற்கையின் கொடையாக இருக்கும் சுவையான இயற்கை பானமாகும்,குறிப்பாக இதை கோடை காலத்தில் குடிப்பது உடலுக்கு உடனடியாக ஆற்றலை அளிக்கிறது. உடலில் எலக்ட்ரோலைட் லெவலை பராமரிக்க தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களை கொண்டுள்ள சக்தி வாய்ந்த பானமாக இளநீர் உள்ளது.
ஸ்வீட் கார்ன்: ஸ்வீட் கார்ன்-ல் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெப்பமான கோடை நாட்களில் இது ஆற்றலை வழங்குகிறது. சருமம், முடி மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
மோர்: வெயில் காலத்தில் தினசரி மோர் அருந்துவதால் உடல் குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்தோடும் இருக்கும். கோடையில் மோர் அருந்துவது ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை குறைக்க கூடும்.
மாம்பழம்: இரும்பு மற்றும் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாக இருக்கும் மாம்பழங்கள் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தர்பூசணி: கோடைகாலம் வந்து விட்டாலே நம் நாட்டில் தர்பூசணி விற்பனை களைக்கட்டும். நீர்ச்சத்து நிறைந்த மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் மற்றும் சூப்பர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெள்ளரிக்காய்: வெயில் காலங்களில் எடுத்து கொள்ள கூடிய மிகவும் பிரபலமான குளிர்ச்சியான உணவுகளில் ஒன்று வெள்ளரிகள். எனவே கோடையில் தர்பூசணிக்கு அடுத்து விற்பனையில் சக்கை போடு போடுவது வெள்ளரிக்காய்கள் தான். நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிகள் உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுவதோடு, உடல் சூட்டையும் குறைக்கும்.
பெர்ரிக்கள்: ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் நெல்லிக்காய் உள்ளிட்டவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவற்றை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம் அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
லெமனேட்: நிம்பு பானி என்று பிரபலமாக அறியப்படும் எலுமிச்சை பானம் கோடை வெயிலுக்கு மத்தியில் நம்மை புத்துணர்ச்சியூட்டும்.
சத்து மாவு (Sattu): வட இந்தியாவில் இந்த ஆரோக்கிய மாவு கொண்டைக் கடலை) கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதில் புரதச் சத்து நிறைந்துள்ளது. சத்து மாவு பானத்தில் உங்கள் டயட்டிற்கு ஏற்ப கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து எளிதாக தயாரிக்கலாம். இந்த பானம் புத்துணர்ச்சி அளிப்பதோடு, நம் உடலுக்கு தேவையான புரதங்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகிறது.
கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டி உடற்பயிற்சிகள்:
ஒருபக்கம் வெயில் வாட்டினாலும் மறுபக்கம் எப்போதும் போல சுறுசுறுப்பாக இருப்பது கோடையில் ஃபிட்னஸை பராமரிக்க முக்கிய வழியாகும்.
நீச்சல்: கொளுத்தும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதில் நீச்சலை விட சிறந்த உடற்பயிற்சி ஏது? நீச்சல் என்பது மிகவும் கடினமானதாக உணர வைக்காத ஒரு பயிற்சியாகும். வெப்பத்தை தணிக்க தண்ணீரில் உடலை குளிர்ச்சியடைய வைக்க உதவும் இயற்கை வழியாக நீச்சல் இருக்கும்.
விறுவிறுப்பான நடைப்பயிற்சி: கோடையில் சுறுசுறுப்பாக உணர மற்றும் இருப்பதற்கு காலை அல்லது மாலை நேரங்களில் தவறாமல் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது சிறந்த வழி.
ஹைகிங்: பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுத்து மலைகளில் ஹைகிங் செல்வது கோடையை அனுபவிக்க கூடிய ஒரு நல்ல சாகச செயல் மற்றும் பயிற்சியாக இருக்கும்.
சைக்கிளிங்: அருகில் இருக்கும் கடைகள் அல்லது மார்கெட்டிற்கு சென்றால் கூட கார் அல்லது பைக் எடுப்பதை தவிர்த்து விட்டு சைக்கிளை பயன்படுத்துவது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
வெயிலை சமாளிக்க உதவும் பொதுவான சில டிப்ஸ்:
வெயிலில் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, கண்களைப் பாதுகாக்க தரமாக கூலர் அணிவது மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது கோடையை சமாளிக்க உதவும் வழிகளாகும்.
தளர்வான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்
கோடையில் உணவை ஜீரணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அஜீரணம் மற்றும் உப்புசம் ஏற்படுவதை தவிர்க்க ஒரே நேரத்தில் சாப்பிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்.
சூரியனின் கடுமையான கதிர் வீச்சிலிருந்து இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க குவாலிட்டியான சன்கிளாஸ் அணியுங்கள்.
தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதன் மூலம் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள்
காஃபின் அதிகம் எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
மதியம் அல்லது வெயில் மிக கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள்.
துரித உணவு, நன்கு வறுத்த அல்லது தெருவில் விற்கும் உணவுகளை தவிர்க்கவும்
தினசரி போதுமான அளவு தண்ணீர் மற்றும் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்க கூடிய பிற ஆரோக்கிய பானங்கள் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.
அதிக அளவு சர்க்கரை இருக்கும் என்பதால் பேக்கேஜ்ட் ட்ரிங்க்ஸ்களை தவிர்த்து விடுங்கள்.
கோடையில் கிடைக்கும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment