வெயில் நேரத்தில் வெளியே போறீங்களா..? இதை செய்யாமல் போகாதீங்க..! - Agri Info

Adding Green to your Life

April 12, 2024

வெயில் நேரத்தில் வெளியே போறீங்களா..? இதை செய்யாமல் போகாதீங்க..!

 நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை மக்களை வெளியே செல்லவே பயமுறுத்துகிறது. மழைக்கு கூட சென்றுவிடலாம் போல.. வெயில்தான் இப்படி வாட்டுகிறது என்கிற புலம்பல்களும் கேட்க முடிகிறது. குறிப்பாக 40 வயதைக் கடந்த பலருக்கும் இந்த வெப்பநிலையின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஆனாலும் இந்த வெயிலை பார்த்தால் வேலை ஆகுமா என்பதுபோல் என்னதான் வெயில் ஒரு பக்கம் அடித்தாலும் நம் வேலைக்காக வெளியே சென்றுதான் ஆக வேண்டும். அப்படி வேலை காரணமாக வெளியே செல்கிறீர்கள் எனில் வெயில் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் கொஞ்சமேனும் தப்பிக்கலாம்.


நீரேற்றத்துடன் இருங்கள் : வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள். பாட்டிலில் நேரடியாக சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதை முடிந்தால் துணியால் சுற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் கொஞ்சமேனும் குளுர்ச்சியாக இருக்கும். வெயிலிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள தண்ணீரை விட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது.


வெளியே சென்றால் சூடான டீ, காஃபி மற்றும் கார்போஹைட்ரேட் பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது. பாட்டில் பானங்கள் அந்த நேரத்தில் குடிக்க குளுர்ச்சியாக , தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அவைதான் உங்களுக்கு தீவிர உடல் நீரிழப்பை உண்டாக்கவும் காரணமாக இருக்கும். வயிறு தொந்தரவுகளை உண்டாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக ORS தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், மோர், பழச்சாறு போன்றவை குடியுங்கள்.

கடின செயல்பாடுகளை தவிர்க்கவும் : வெயிலில் சும்மா நின்றாலே நம்முடைய ஆற்றலை உறிஞ்சி விடும். நீங்கள் சுற்றித் திரிந்து அலைந்து கடுமையான வேலைகளை செய்கிறீர்கள் எனில் நிச்சயம் அதன் பக்கவிளைவுகளை அனுபவிக்கக் கூடும். அப்படி வேலை செய்தே ஆக வேண்டும் எனில் அடிக்கடி ஓய்வு எடுங்கள். நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். ஏனெனில் தண்ணீரில் இருக்கும் மினரல் சத்துக்கள்தான் உங்களுக்கு குறையும் ஆற்றலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

பாதுகாப்பான உடைகள் : கோடைக்கு நன்கு காற்றோட்டமான ஆடைகளை உடுத்துவது அவசியம். குறிப்பாக காட்டன் ஃபேப்ரிக் உடைகளை அணிவது சிறந்தது. இறுக்கமாக அல்லாமல் லூஸாக அணிவது நல்லது. அதேபோல் அணியும் உடையின் நிறமும் அவசியம். நிறம் அடர்த்தியான உடைகள் வெயிலை உறிஞ்சி உடலில் எளிதில் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே பளீர் நிற உடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது குடை, கேப், டவல் இவற்றையும் கொண்டு செல்லுங்கள்.

பாதுகாப்பான உடைகள் : கோடைக்கு நன்கு காற்றோட்டமான ஆடைகளை உடுத்துவது அவசியம். குறிப்பாக காட்டன் ஃபேப்ரிக் உடைகளை அணிவது சிறந்தது. இறுக்கமாக அல்லாமல் லூஸாக அணிவது நல்லது. அதேபோல் அணியும் உடையின் நிறமும் அவசியம். நிறம் அடர்த்தியான உடைகள் வெயிலை உறிஞ்சி உடலில் எளிதில் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே பளீர் நிற உடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது குடை, கேப், டவல் இவற்றையும் கொண்டு செல்லுங்கள்.

சன் ஸ்கிரீன் கட்டாயம் : சரும நிபுணர்களும் வெளியே சென்றால் கட்டாயம் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள் என்பார்கள். எனவே முகத்திற்கு மட்டுமல்லாமல் கை , கால் என வெளியில் தெரியக்கூடிய அனைத்து இடங்களிலும் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள். இதுதான் புறஊதா கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதை தவிர்க்க உதவுகிறது.

குறைந்த மிதமான உணவு : வெயில் காலத்தில் ஜீரண சக்தி வேகமாக இருக்காது. குறிப்பாக சாப்பிடவும் பிடிக்காது. சாப்பிட்ட உணவு எப்போதும் மந்தமாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர்தான் குடிக்கக் தோன்றும். எனவே இதுபோன்ற நேரத்தில் அதிக மசாலா, நீண்ட நேரம் ஜீரணிக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

அதேபோல் அளவுக்கு அதிகமாக இல்லாமல் குறைவாக சாப்பிடுங்கள். ஏனெனில் உடல் செரிமானத்திற்காக அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொண்டால் உடலில் எனர்ஜி சீக்கிரம் இறங்கிவிடும். வெளியே செல்லும்போது வெயில் ஒரு பக்கம் உங்கள் எனர்ஜியை உறிஞ்சிவிடும். இவை உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். எனவே வெளியே செல்வதாக இருந்தால் உணவை மிதமாக , அளவாக உட்கொள்வது அவசியம்.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment