இன்று பல பெண்கள் தங்களுடைய முகத்திற்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை தங்களுடைய கால்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பெடிக்யூர், மெனிக்யூர் போன்ற கால்களின் அழகை மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலர் சந்திக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக குதிகால் வெடிப்பு அமைகிறது.
கால்களை சுற்றி இருக்கும் தோலில் விரிசல்கள் ஏற்பட்டு வறண்டு காணப்படுவது பாத வெடிப்பு எனப்படுகிறது. இது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அசௌகரியம், வலி அல்லது மோசமான சூழ்நிலைகளில் இரத்த கசிவை கூட ஏற்படுத்தலாம். ஆகவே பாத வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கு உதவும் குறிப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
பாத வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உலர்ந்த தோல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கால்களில் உள்ள தோல் வறண்டதாக மாறி அதன் நெகிழ்வு தன்மையை இழக்கும் பொழுது பாத வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குளித்த பிறகு உங்களுடைய கால்களுக்கு நீங்கள் போதுமான மாய்சரைசேஷன் வழங்காததால் பாத வெடிப்பு உண்டாகிறது.
வயது : நமக்கு வயதாக வயதாக நமது சருமத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் அதன் நெகிழ்வுத் தன்மை இழக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய கால்களை ஃபுட் கிரீம் பயன்படுத்தி மாய்சரைஸ் செய்வது அவசியம். இல்லை எனில் உங்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படலாம்.
நீண்ட நேரம் நிற்பது : ஆசிரியப் பணி அல்லது துணி கடைகளில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரத்திற்கு நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இது கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் பாத வெடிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட தூரம் நடப்பதனாலும் கால்களில் அழுத்தம் உண்டாகி பாத வெடிப்பு ஏற்படலாம்.
சரியான காலணிகள் அணியாமல் இருப்பது குதிகால் மட்டுமல்லாமல் உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாத ஷூக்கள் அல்லது செருப்புகளை அணியும் பொழுது அது உங்களின் கால்களில் அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் குதிகால்கள் அழுந்தி அவற்றில் விரிசல்கள் ஏற்படுகிறது. டயாபடீஸ், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும் பாத வெடிப்புகளால் அவதிப்படுகின்றனர்.
கற்பூரம் பாத வெடிப்புக்கு எப்படி தீர்வாக அமைகிறது?
பாத வெடிப்புகளுக்கு பல்வேறு விதமான பெடிக்யூர் ஆப்ஷன்கள் உள்ளன. அந்த வகையில் இயற்கை பொருளான கற்பூரம் பயன்படுத்தி உங்களுடைய பாத வெடிப்புகளில் இருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம். கற்பூரம் பல்வேறு விதமான மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக அது நமது தோலை ஆற்றி பல்வேறு விதமான சரும நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பாத வெடிப்பிற்கு கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
கற்பூரம் அத்தியாவசிய எண்ணெயை நீங்கள் வேறொரு கேரியர் எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தாவிட்டால் அது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே ஒரு சில துளிகள் கற்பூரம் அத்தியாவசிய எண்ணெயோடு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயை கலக்கவும். சரியாக சொன்னால் ஒரு அவுன்ஸ் கேரியர் எண்ணெய்க்கு 5 முதல் 10 துளிகள் கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய் போதுமானதாக இருக்கும்.
இந்த எண்ணெய் கலவையை உங்களுடைய கால்களில் பயன்படுத்துவதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான சோப்பு நிறைந்த தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து தோலை மென்மையாக்கவும். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது எண்ணெய் தோலில் எளிதாக உறிஞ்சப்படும்.
கால்களை ஊற வைத்த பிறகு ஒரு சுத்தமான துண்டு பயன்படுத்தி ஒத்தி எடுத்து உலர வைக்கவும்.
எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்பு கால்களில் ஈரப்பதம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில் அதனால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்.
இப்பொழுது கேரியர் எண்ணெயோடு கலந்த கற்பூர அத்தியாவசிய எண்ணெய் கலவையை கால்களில் தடவி பொறுமையாக மசாஜ் செய்யுங்கள்.
எண்ணெய் தடவிய பிறகு சுத்தமான காட்டன் சாக்ஸ் அணிந்து கொள்வது அங்குள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கும், எண்ணெய் சருமத்தில் ஊடுருவுவதற்கும் உதவும்.
இதனை நீங்கள் தூங்குவதற்கு முன்பு செய்யலாம். சிறந்த முடிவுகளுக்கு தினமும் தூங்குவதற்கு முன்பு இவ்வாறு செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய் பொதுவாக பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது. ஆனால் ஒருவேளை அதனை பயன்படுத்திய பிறகு உங்களுக்கு ஏதேனும் எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படுமாயின் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் இதனை நீங்கள் அதிகப்படியாக பயன்படுத்தினால் சரும எரிச்சல், குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment