மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதை பண்ணுங்க : ரொம்ப முக்கியம் பாஸ் - Agri Info

Education News, Employment News in tamil

April 8, 2024

மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதை பண்ணுங்க : ரொம்ப முக்கியம் பாஸ்

 வெயில் காலத்தில்தான் நமக்கு பிடித்த மாம்பழங்களை நாம் சாப்பிட முடியும். இந்நிலையில் நாம் மாம்பழத்தை வழக்கமாக தண்ணீரில் கழுவிய பிறகு சாப்பிடுவோம். இந்நிலையில் இதற்கு பதிலாக நாம் மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து, பிறகு எடுத்துகொண்டால் நல்லது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாம் ஒரு மணி நேரம் மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது, அதில் உள்ள பைட்டிக் ஆசிட் குறையும், இந்த பைடிக் ஆசிட், நமது உடலுக்கு தேவையான சத்துகளை எடுத்துகொள்ளாதபடி செய்யும் தன்மை கொண்டது, தண்ணீரில் ஊற வைப்பதால், இந்த அளவு குறையும்.

இநிந்லையில் 1 மணி நேரம் என்பது அதிகமாக தெரிந்தால் 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதால், மலச்சிக்கல், தலைவலி , முகப்பருக்கள், குடல் தொடர்பான பிரச்சனை ஏற்படாது.

மேலும் ஆயுர்வேத முறைப்படி இப்படி செய்வதால், உடலில் உள்ள சூட்டை தனிக்கும். மேலும் இது ஜீரணத்திற்கு உதவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுக்க வேண்டும். தொடர்ந்து மாம்பழத்தை இதில் சேர்க்கவும். மாம்பழம் முங்கும் வரை தண்ணீர் இருக்க வேண்டும். 1 மணி நேரம் கழித்து, மாம்பழத்தை எடுத்து, துணிவைத்து துடைக்க வேண்டும்.   

🔻 🔻 🔻 

 

No comments:

Post a Comment