ஈரோடு கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக A/c , Fridge , Washing Machine மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி வழங்கபடவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வருகின்ற 29-04-2024 முதல் 03-06-2024 வரை 30 நாட்கள் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயிற்சி சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்வதற்கான எண்கள் : 8778323213, 7200650604 0424-2400338
இலவச பயிற்சி முகாம் நடைபெறும் இடம் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002 .
🔻🔻🔻
No comments:
Post a Comment