சில்லென்று இருக்கும் பானங்கள் அல்லது தண்ணீரை குடிப்பது நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனாலும் எப்போதாவது ஐஸ்-கோல்டு வாட்டரை குடிப்பது வேறு வெயிலுக்காக தினமும் குடிப்பது சிறந்த விஷயம் அல்ல என பலர் நம்புகிறார்கள். கோடைகாலம் வந்துள்ள நிலையில் வெயில் கொடுமையிலிருந்து சிறிது இளைப்பாற குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் குடிக்கும் ஓழக்கம் பலரிடமும் உள்ளது. இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க மற்றும் இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்க, உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம். இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நீரிழப்பு தவிர்க்க உதவுகிறது. மேலும் இது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமான நீரிழப்பை தவிர்க்க உதவுகிறது.
பொதுவாக நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்குகிறது. சுருக்கமாக சொன்னால் குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க மற்றொரு காரணம் குறிப்பாக சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்கிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் சோனம் சோலங்கி.
அதே சமயம் கடும் கோடை காலத்தில் ஒருவர் ஐஸ் வாட்டரை குடிப்பதால் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா மகாதிக். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், வொர்கவுட்களின் போது ஜில் தண்ணீரை குடிப்பது உடலை அதிக வெப்பமடையாமல் தடுக்க உதவுகிறது என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிகாட்டி உள்ளார்.
ஒருவருக்கு காய்ச்சல் , ஜலதோஷம் இருக்கும் போது அல்லது அவருக்கு ஏதேனும் நாள்பட்ட நிலை இருந்தால் ஐஸ் வாட்டர் குடிப்பது சரியான யோசனை அல்ல என்கிறார் ஸ்வேதா. வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றியும் கூறி இருக்கிறார் ஸ்வேதா. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கணிசமான நன்மைகள் உண்டு மற்றும் ஐஸ் வாட்டரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் எதுவும் இல்லை. மேலும் வழக்கமான அறை வெப்பநிலை தண்ணீரைக் குடிப்பது போன்ற அதே நன்மைகளையே வெதுவெதுப்பான தண்ணீரும் கொண்டிருக்கும் என்கிறார்.
ஐஸ் வாட்டரை குடிப்பதை விட வெந்நீரை குடிப்பது நன்மை பயக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிக்ஸா பவ்ஸர். வெந்நீர் (வெதுவெதுப்பான தண்ணீர்) குடிப்பது பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், அதிக குளிர்ச்சியுடன் இருக்கும் ஐஸ் வாட்டரை தவிர்த்து விட்டு அதற்கு பதில் அறை வெப்பநிலை அல்லது வெதுவெதுப்பாக இருக்கும் நீரை குடிப்பது நல்லது என்கிறார்.
தண்ணீர் குடிப்பதற்கான சிறந்த வழி பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், குடிக்கும் தண்ணீரின் அளவு போதுமானதாக இருக்க வேண்டுமே தவிர அதிகமாக இருக்க கூடாது என்றும் பரிந்துரைத்து உள்ளார். அதே போல உட்கார்ந்து கொண்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும், நின்று கொண்டு அல்லது நடந்து கொண்டோ தண்ணீர் குடிக்க கூடாது, என்றும் கூறி இருக்கிறார்
🔻🔻🔻
No comments:
Post a Comment