கோடை வெய்யில்...தோல் தொற்று நோயை தடுக்க இதை செய்யுங்கள் - Agri Info

Adding Green to your Life

April 2, 2024

கோடை வெய்யில்...தோல் தொற்று நோயை தடுக்க இதை செய்யுங்கள்

 தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தக் கோடை வெயிலால் பொதுமக்களுக்கு வியர்வை வியர்வை துர்நாற்றம் தோல் வியாதிகள் சரும பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதிலிருந்து பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் உடலை எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என டாக்டர் சண்முகம் பல வழிமுறைகளை பகிர்ந்துள்ளார். முதலில் கோடை காலத்தில் முக்கியமாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடை உடலில் உருவாகும் வியர்வையை உறிஞ்சும் தன்மையும், வியர்வை வராமலும் தடுக்கும்.

சிறுநீர் கடுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு இளநீர் மோர் பதநீர் நுங்கு பழச்சாறு தர்பூசணி போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும். வியர்வை வராமல் தடுப்பதற்கு ஆன்ட்டி பங்கள் டால்க்கம் பவுடரைபயன்படுத்தலாம். இந்தப் பவுடரை இரவு நேரத்தில்பயன்படுத்த வேண்டும். மேலும் சருமத்தை வறட்சி அடைய செய்யும் எந்த சோப் வகைகளையும் பயன்படுத்த வேண்டாம்.

போதுமான அளவிற்கு பொதுமக்கள் சருமத்தை தற்காத்துக் கொள்வதற்கு கடலை மாவு பாசிப்பருப்பு மாவு அதனுடன் தேவைக்கேற்ப கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தடவி வந்தால் சரும பிரச்சனைகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள முடியும். குறிப்பாக கோடை காலத்தில்வெள்ளை நிற ஆடைகளை அணிவதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். மேலும் கோடை காலத்தில்பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவது வழக்கம். இதனை தடுப்பதற்கு புளித்த கேழ்வரகு கூழை குடித்தால் நல்லது.

அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வெயில் காலத்தில், வியர்வையினால் துர்நாற்றம் ஏற்படும், இதனை தடுப்பதற்கு சந்தனத்தை தடவி குளித்தால் துர்நாற்றம் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தோல் அலர்ஜி ஏற்பட்டால் அதற்கு படிகார கல் பவுடர் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் சரியாகிவிடும் என சித்த மருத்துவர் சண்முகம் கூறியுள்ளார்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment