பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக நெட் என்ற பெயரில் தேசியத் தகுதித் தேர்வும், செட் என்ற பெயரில் மாநிலத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகின்றன. நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான செட் தேர்வை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
தமிழ், கணிதம் உள்ளிட்ட 43 பாடங்களுக்கான செட் தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500-ல் ருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாம் பாலினத்தவருக்கு எந்த கட்டணமும் இல்லை..
தேர்வு தேதி: ஜூன் 3 முதல் 25ஆம் தேதிக்குள் மாநில தகுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெறும்.
அடிப்படைத் தகுதிகள் என்ன : முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை. 58 வயது வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு https://msutnset.com/TNSET2024_Notifications.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பம் செய்வது எப்படி: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் https://app.msutnset.com/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment