ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிக
வ. எண் |
எழுத்து |
பொருள் |
1. |
அ |
எட்டு, அழகு, சிவன், திருமால், நான்முகன், சுட்டு, அசை,
திப்பிலி, 8 என்ற
எனர்
வடிவம், சேய்மை |
2. |
ஆ |
ஆச்சாமரம், வியப்பு, பசு, வினா, விடை,
சொல்,
ஒர்
இனம்,
ஆன்மா, வரை,
நினைவு, உடன்பாடு, இரக்கம், வியப்பு, துன்பம், மறுப்பு, உருக்கம், இணைப்பு, இச்சை |
3. |
இ |
அண்மைச்சுட்டு,
இங்கே, இவன்,
அன்பு, விகுதி, இகழ்ச்சி |
4. |
ஈ |
அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ்,
திருமகள், நாமகள், வண்டு, தேன்,
தேனீ,
நரி,
பாம்பு, பார்வதி, கொடு,
கொக்கு, பூச்சி |
5. |
உ |
சிவபிரான், நான்முகன், உமையவள், ஒர் இடைச்சொல், சுட்டெழுத்து, ஆச்சரியம், உருக்கம் |
6. |
ஊ |
உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன்,
தசை,
உண்ணல், சந்திரன் |
7. |
௭ |
குறி, வினாஎழுத்து |
8. |
ஏ |
இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு,
செலுத்துதல், மேல்நோக்குதல், வினா |
9. |
ஐ |
தலைவன், அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு,
கோழை,
சர்க்கரை, கன்னி, சிவன், கிழங்கு, தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை, பெருநோய், ஆசை,
வியப்பு, ஐந்து, ஐயம்,
கணவன், பாஷனம், மென்மை, மேன்மை, மருந்து |
10. |
ஓ |
ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம்,
நான்முகம், வினா
பரிநிலை, நான்முகன், கொன்றை, ஆபத்து |
11. |
ஒள |
பாம்பு, நிலம், விழித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல், பூமி,
ஆனந்தம் |
12. |
க |
அரசன், நான்முகன், தீ ஆன்மா, உடல்,
காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி,
நமன்,
மயில், மனம்,
மணி,
இமயம், திங்கள், உடல்,
நலம்,
தலை,
திரவியம், நீர்,
பறவை,
ஒளி,
முகில், வில்லவன், பொருத்து, வியங்குகோள் விகுதி, பறவை |
13. |
கா |
அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், காவடித்தணடு, பூ,
கலைமகள், நிறை,
காவல், செய்,
வருத்தம், பாதுகாப்பு, வலி,
துலாக்கோல் |
14. |
கீ |
கிளிக்குரல்,
தடை,
தொனி,
நிந்தை, பாவபூமி |
15. |
கு |
குற்றம், சிறுமை, இகழ்ச்சி, நீக்குதல், நிறம், இண்மை, பூமி, உருபு, சாரியை |
16. |
கூ |
பூமி, பிசாசு, அழுக்கு, கூகை,
கூக்குரல், கூவுதல், ஓசைக்குறிப்பு |
17. |
கை |
இடம், ஒப்பனை, ஒழுக்கம், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைம்மரம், விசிறிக்காம்பு, படையுறுப்பு, ஆற்றல், ஆள்,
உலகு,
உடன்,
திங்கள், செய்கை, பகுதி, பிடிப்பு, மரவட்டை, முறை,
வரிசை, கரம்,
சயம்,
வழக்கம், தங்கை, ஊட்டு, வன்மை, சதுரம், சங்கு, வண்டு, கைத்தலம், அஞ்சலி, கைத்தொழில், கைப்பிடி, அஞ்சலி, விறகு |
18. |
கோ |
அரசன், அம்பு, வானம், ஆண்மகன், இடியேறு, இலந்தை, ரோமம், கண், எழுது, சந்திரன், கிரணம், சூரியன், திசை,
நீர்,
தேவலோகம், பசு,
பூமி,
பெரியமலை, தாய்,
வாணி,
மேன்மை, வெளிச்சம், தகப்பன், தலைமை, குயவன், சொல்,
சாறு,
அரசியல், இரங்கல், தொடு,
சொர்க்கம், சொல் |
19. |
கெள |
கிருத்தியம்,
கொல்லு, தீங்கு, வாயால் பற்றுதல் |
20. |
சா |
பேய், இறப்பு, சோர்தல், சாதல், 6 என்ற எண்,
கழிதல், பேய் |
21. |
சீ |
அடக்கம், இகழ்ச்சி, அலட்சியம், காந்தி, சம்பத்து, கலைமகள், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, விந்து, கீழ்,
சளி,
சீதேவி, செல்வம், வெறுப்பு |
22. |
சு |
அதட்டு, ஒசை, நன்மை, சுகம், விரட்டுதல் |
23. |
சூ |
வானவகை |
24. |
சை |
கைப்பொருள், செல்வம் |
25. |
சே |
எருது, அழிஞ்சில் மரம், உயர்வு, எதிர்மறை, ஒலிக்குறிப்பு, சிவப்பு, காளை,
செங்கோட்டை, சேரான், இடபம் |
26. |
சோ |
அரண், உமை, வானாசுரன், நகர்,
வியப்புச்சொல், உமையாள், ஒலி
மதில் |
27. |
ஞா |
சுட்டு, பொருத்து |
28. |
த |
குபேரன்,நான்முகன் |
29. |
தா |
கொடு, அழிவு, குற்றம், கேடு,
கொடியன், தாண்டுதல், பகை,
நான்முகம், வலி,
வருத்தம், வியாழன், நாசம், வலிமை, குறை,
பரப்பு, தருக,
தாவுதல் |
30. |
தீ |
நெருப்பு, அறிவு, இனிமை, தீமை, உபாயவழி, நரகம், சினம், நஞ்சு, ஞானம், கொடுமை, ஒளி,
விளக்கு |
31. |
து |
அசைத்தல், அனுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிரிவு, வருத்தல், வளர்தல் |
32. |
தூ |
சீ, துத்தம், தூய்மை, வெண்மை, தசை,
வலிமை, வகை,
பற்றுக்கொடு, புள்ளிறகு, பகை,
பறவை,
இறகு |
33. |
தே |
தெய்வம், மாடு, அருள், கொள்கை, நாயகன், கடவுள் |
34. |
தை |
மாதம், பூச நாள், மகரராசி, அலங்காரம், மரக்கன்று, ஒரு
திங்கள், கூத்தோசை, தைத்தல் |
35. |
நா |
அயலாள், சுவாலை, திறப்பு, மணி, நாக்கு, வளைவு, பூட்டின், தாழ்,
நான்கு, சொல்,
ஊதுவாய் |
36. |
ந |
சிறப்பு, மிகுதி, இன்பம் |
37. |
நெள |
மரக்கலம், நாவாய், படகு, தெப்பம் |
38. |
நீ |
முன்னிலை, ஒருமை, நீண்ட, நீலம். |
39. |
நு |
தியானம், நேசம், உபசர்க்கம், தோனி, நிந்தை, புகழ், ஐயம்,
நேரம் |
40. |
நூ |
எல், யானை, ஆபரணம், நூபுரம் |
41. |
நெ |
கனிதல், நெகிழ்தல், வளர்தல், கெடுதல், மெலிதல், பிளத்தல், இளகல் |
42. |
நே |
அன்பு, அருள், நேயம், அம்பு, நட்பு, உழை |
43. |
நொ |
துன்பம், நோய், வருத்தம், வளி,
மென்மை |
44. |
நோ |
நோய், இன்மை, சிதைவு, துக்கம், பலவீனம், இன்பம் |
45. |
நை |
வருந்து, இரக்கம் கொள், சுருங்கு, நைதல் |
46. |
ப |
காற்று, சாபம், பெருங்காற்று,
குடித்தல் |
47. |
பா |
அழகு, நிழல், பரப்பு, பாட்டு, தூய்மை, காப்பு, கைம்மரம், பாம்பு, பஞ்சு, நூல்,
பாவு,
தேர்தட்டு, பரவுதல் |
48. |
பி |
அழகு |
49. |
பீ |
பெருமரம், மலம், அச்சம் |
50. |
பூ |
அழகு, இடம், இருக்குதல், இலை,
ஒமக்கினி, ஒரு
நாகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி,
பொழிவு, மலர்,
நிறம், புகர், மென்மை, பூத்தல், பொலிவு |
51. |
பே |
நுரை, மேகம், அச்சம், இல்லை, பேய்,
சினம் |
52. |
பை |
கைப்பை, பசுமை, அழகு, குடர், சாக்கு, நிறம், பாம்பின் படம்,
மந்தகுணம், மெத்தனம், இளமை,
உடல்,
வில்,
கொள்ளளவு, உள்ளுறுப்பு, சட்டப்பை, கொள்கலன் |
53. |
போ |
ஏவல், போவென், பறந்திடு, செல் |
54. |
ம |
இமயன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், அசோகமரம், எமன், பிரம்மன் |
55. |
மா |
அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு,
அறிவு, ஆணி,
இடை,
ஒரு
மரம்,
கட்டு, கறுப்பு, குதிரை, பன்றி, யானை,
சரஸ்வதி, சீலை,
செல்வம், தாய்,
துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி,
பெருமை, மகத்துவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல்,
வலி,
வெறுப்பு, பெரிய, தாய்,
செல்வம் |
56. |
மீ |
ஆகாயம், உயர்ச்சி, மேலிடம், மகிமை, மேலே, வான், மேன்மை, பெருமை |
57. |
மூ |
மூப்பு, மூன்று, மூவேந்தர், அழிவுறு |
58. |
மே |
மேம்பாடு, அன்பு, விருப்பம், மேன்மை |
59. |
மை |
கண்மை, குற்றம், இருள், எழு, கருப்பு, செம்மறி ஆடு,
நீர்,
மலடி,
மேகம், தீவினை, மதி,
மந்திரமை, வண்டினம், கலங்கம், பசுமை, பாவம், அழுக்கு, இளமை,
களங்கம், அஞ்சனம் |
60. |
மோ |
மோத்தல், மோதல், முகர்தல் |
61. |
யா |
ஐயம், இல்லை, யாவை,
கட்டுதல், அகலம், ஒருவகை மரம்,
சந்தேகம் |
62. |
வா |
வருக, வாய், தாவுதல் |
63. |
வி |
நிச்சயம், வித்தியாசம்,
பிரிவு, கொள்திரம், உபசர்க்கம், ஆகாயம், கண்,
காற்று, திசை,
பறவை,
அழகு,
விசை,
விசும்பு, அறிவு |
64. |
வீ |
மலர், சாவு, கொள்ளுதல், நீக்கம், பறவை,
மோதல், விரும்புதல், மகரந்தம், கரு
பிரித்தல், பூ,
மரணம், மகரந்தம், சோர்வு |
65. |
வே |
வேவு, ஒற்று |
66. |
வ |
நான்கில் ஒரு பங்கு |
67. |
வை |
கூர்மை, புல், வைக்கோல், வையகம், வைதல், சபித்தல், கொடு |
68. |
வெள |
வெளவுதல், கெளவுதல், பற்றுதல் |
🔻🔻🔻
0 Comments:
Post a Comment