Search

நீங்க ஒரு டீம் லீடரா… உங்க டீம் சிறப்பாக செயல்பட இந்த யுக்திகளை ஃபாலோ பண்ணுங்க.!

 

தலைமைத்துவ பண்புகள் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அதனை வளர்த்துக் கொள்வதற்கு நாம் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குழுவை பொருத்த வகையில் அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபருமே முக்கியமானவர்கள் மற்றும் அவர்களின் செயல்திறன் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையேயான வித்தியாசமாக அமைகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு டீம் லீடராக இருந்து உங்கள் குழுவின் செயல் திறனை ஊக்கப்படுத்துவதற்கான யுக்திகளை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தெளிவான இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைக்கவும் : எப்பொழுதும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் மற்றும் உங்களின் இலக்குகள் என்ன என்பதை உங்கள் குழுவிடம் தெளிவாக எடுத்துரைக்கவும். குறிப்பிட்ட மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழுவில் இருக்கக்கூடிய அனைவராலும் அடையக்கூடிய வகையில் இலக்குகளை அமையுங்கள்.


உதாரணமாக திகழவும் : எப்பொழுதும் உங்களுடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த குழுவிற்கு ஒரு உதாரணமாக அமைய வேண்டும். பிறரிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதை நீங்கள் முன் உதாரணமாக இருந்து செய்ய வேண்டும். ஒரு பிரச்சினையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்றாக இருக்கட்டும் அல்லது உங்களுடைய அர்ப்பணிப்பு திறனாக இருக்கட்டும், அனைத்துமே உங்கள் குழுவில் இருக்கக்கூடிய நபர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும்.

தெளிவான தகவல் தொடர்பு : ஒரு குழுவின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு நீங்கள் திறம்பட மற்றும் போதுமான அளவு தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். எனவே தகவல் தொடர்புக்கான தெளிவான விஷயங்கள் உங்கள் குழுவிற்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். பல்வேறு வகையான கேள்விகள் அல்லது அப்டேட்டுகளுக்கு யாரை அணுக வேண்டும் என்பதை ஒரு குழுவில் உள்ள அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டு முயற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் : வெளிப்படையான வேலை சூழலை உருவாக்குவதன் மூலமாக டீம் மெம்பர்கள் இடையே கூட்டு முயற்சியை ஊக்குவியுங்கள். அனைவரும் தங்களுடைய யோசனைகள், ஃபீட்பேக்குகள் போன்றவற்றை தயக்கமின்றி வழங்குவதில் சௌகரியமாக உணரும் வகையிலான சூழலை உருவாக்கி தாருங்கள்.


வேலைகளை திறம்பட முடிப்பதற்கு முன்னுரிமை வழங்கவும் : எந்த வேலை மிகவும் முக்கியமானது மற்றும் அவசரமானது என்பதை கண்டறிந்து அதனை முதலில் செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதிக பிரையாரிட்டி கொண்ட டாஸ்க்களில் கவனம் செலுத்துமாறு உங்கள் குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கவும். இது போன்ற விஷயங்களில் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவதன் மூலமாக நீங்கள் அதிக கவனத்தை உறுதிப்படுத்தலாம்

போதுமான அளவு ஆட்கள் மற்றும் ஆதரவை தரவும் : ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பொதுவாக ஆட்கள் குறைவாக இருப்பது வழக்கம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு ஆட்கள் தேவைப்படுமோ அதனை நீங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும். மேலும் அதற்கான பயிற்சி, கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல், வழிகாட்டுதல் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.


வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கவும் : செயல்திறனை பராமரித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் வேலை-வாழ்க்கை சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவுபடுத்துங்கள். சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உங்கள் குழுவினர் இடையே ஊக்குவிக்கவும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் எல்லை கோடுகளை அமைக்கச் சொல்லவும். நிறுவனங்களின் வெற்றிக்கு ஊழியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை புரிய வைக்கவும்.


வழக்கமான ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம் வழங்கவும் : ஒரு குழுவின் செயல்திறனில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையான கருவிகள் ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம். வழக்கமான முறையில் நீங்கள் அவர்களுக்கு பாசிட்டிவான ஃபீட்பேக் வழங்கி, அவர்களுடைய சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறாதீர்கள்.

வழக்கமான ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம் வழங்கவும் : ஒரு குழுவின் செயல்திறனில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையான கருவிகள் ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம். வழக்கமான முறையில் நீங்கள் அவர்களுக்கு பாசிட்டிவான ஃபீட்பேக் வழங்கி, அவர்களுடைய சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறாதீர்கள்.

நெகிழ்வுத்தன்மை மற்றும் இணக்கத்திறனை ஊக்குவிக்கவும் : ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இணக்கத்திறன் ஆகிய இரண்டும் அத்யாவசியமானவை. புதிய யோசனைகள், தொழில்நுட்பங்களை உங்கள் குழுவிடையே ஊக்குவிக்க யோசிக்காதீர்கள். மாற்றங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள் புத்தாக்க யோசனைகளை பயன்படுத்துங்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடுங்கள்.

கடுமையான உழைப்பு வெற்றி பெறுவதற்கு அவசியம் என்றாலும் கூட இன்றைய காலகட்டத்தில் “ஸ்மார்ட் வொர்க்” அதைவிட மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த யுக்திகளை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வெற்றி பாதையில் அழைத்து செல்லுங்கள்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment