சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரி காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான (Non teaching post) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 8 Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி), 12 Junior Technical Superintendent பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமும், பணி அனுபவமும் உள்ளவர்கள் எதிர்வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Technical Officer
கல்விக்கான தகுதிகள்: பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும். அதேபோன்று, இதே பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருந்தால் போதுமானது.
பணி: Junior Technical Superintendent
காலியிடங்கள் எண்ணிக்கை : 12
கல்விக்கான தகுதிகள்: உயிரியல், வாழ்க்கை அறிவியல்(Life Science),வேதியியல், கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருப்பவர்கள், பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தொடர்புடைய துறைகளில் குறைந்தது 8 ஆண்டுகள் பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: Technical Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். Junior Technical Superintendent பதவிக்கு 32-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? சென்னை ஐஐடி-யின் அதிகாரப்பூர்வமான www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2024 ஆகும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment