சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப். 22 தொடங்கி 26-ம் தேதி வரை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிநடைபெறும்.
இப்பயிற்சியில் பழ பிரெட், கோதுமை பிரெட், பூண்டு பிரெட், எள்ளு பிஸ்கெட், மசாலா பிஸ்கெட், கோதுமை பன், பழ பன், பூண்டு ரஸ்க், கோதுமை ரஸ்க், சிக்கன் பஃப்ஸ், எக் பஃப்ஸ், கிரீம் கேக்குகள், வெஜ்மற்றும் சிக்கன் பீட்சா உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக் கட்டணம் ரூ.4,720. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 86676 36706, 97863 17778 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment