Search

கோடையில் கண்கள் வறண்டு போய் எரியுதா..? இதை செஞ்சா உங்க பிரச்சனை சரியாகலாம்..!

 கோடைகாலத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் வறண்ட கண்கள், சோர்வான கண்கள், வலி மற்றும் அலர்ஜி ஆகியவை பொதுவாக ஏற்படும் சில கண் பிரச்சனைகள் ஆகும்.

மக்கள் வெயில் காலத்தில் பெரும்பாலும் சரும பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் அதிகப்படியான தாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் கார்னியல் தீக்காயங்களுக்கு (corneal burns) வழிவகுக்கும். இது மங்கலான பார்வை, வறட்சி உள்ளிட்ட மோசமான உணர்வுகளை கண்கள் பெற செய்கிறது. எனவே சருமத்தை போலவே கோடையில் கண்களையும் முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம். வெயில் நேரத்தில் ஆரோக்கிய கண்களுக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ் இங்கே:

வெளியே செல்லும் போது சன்கிளாஸ்.. வெயில் காலத்தில் சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல கண்களுக்கு நல்ல தரமான கிளாஸ்கள் அவசியம். வெயில் உச்சத்தில் இருக்கும் போது நீங்கள் அவசியம் வெளியே செல்ல வேண்டும் என்றால் உங்கள் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நல்ல தரமான சன்கிளாஸ் அணிந்து கொண்டு செல்லுங்கள். புற ஊதா கதிர்களின் அதிக தாக்கம் காரணமாக ஏற்படும் corneal burn போன்றவற்றிலிருந்து சன்கிளாஸ் பாதுகாப்பு அளிக்கிறது.

ஹைட்ரேட்டாக இருத்தல்.. சிறந்த கண் ஆரோக்கியத்திற்கும், உடலில் போதுமான அளவு நீர்சத்து இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது. கண் ஆரோக்கியம் நன்றாக இருக்க போதுமான அளவு திரவங்களை எடுத்து கொள்வது அவசியம். கோடையில் அடிக்கும் வெயிலுக்கு நம் கண்களின் கண்ணீர்ப் படலம் அடிக்கடி ஆவியாகி விடும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, உடல் ஆரோக்கியமான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய உதவும்.

கண் சொட்டு மருந்து பயன்படுத்துங்கள்.. கோடைக்காலம் கண் வறட்சி மற்றும் கண் எரிச்சலுக்கு வழி வகுக்கிறது. சில நேரங்களில் போதுமான அளவு உங்களால் ஹைட்ரேட்டாக இருக்க முடியவில்லை என்றால், கண் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு உங்களுக்கு ஏற்ற கண் சொட்டு மருந்தை (eye drops) நீங்கள் பயன்படுத்தலாம். இது கண்களை லூப்ரிகேட் செய்ய, வலி மற்றும் வறட்சியை நீக்க பயன்படுகிறது.

சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் போது கவனம் தேவை.. சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும் போது, கண்கள் மற்றும் கண் இமை பகுதிக்கு அருகில் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சில சன்ஸ்கிரீன்களில் SPF அதிகம் இருக்க கூடும். தவறுதலாக உள்ளே சென்றால் கண்களுக்கு அசௌகரியம் ஏற்படும். மேலும் கண்களின் மேற்பரப்பில் கெமிக்கல் பர்னை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு கொஞ்சம் அசௌகரியம் மற்றும் வலி இருக்க கூடும்.

உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.. வெயில் வாட்டி எடுக்கும் நேரத்தில் புற ஊதா கதிர்களின் தாக்கமும் உச்சத்தில் இருக்கும். எனவே ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க, பார்வையை பராமரிக்க அவசியமின்றி உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

வெளிப்புற நடவடிக்கைகளின் போது.. நீச்சல், தோட்ட பணிகள் அல்லது மரவேலை செய்வது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ ப்ரொடக்ஷன் தயாரிப்புகளை அணிந்து கொள்ளுங்கள். நீர், காற்று, தூசி முதலியவற்றிலிருந்து உங்கள் கண்கள் மற்றும் முகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் கிளாஸ்கள், ஹெல்மெட், ஷீல்டுகள், ஃபேஸ் ஷீல்டுகள் அணிவதை உறுதி செய்யவும். கோடைகால கண் பிரச்சனைகளைத் தடுக்க, வழக்கமான இடைவெளியில் கண் மருத்துவரிடம் செல்லலாம்.



🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment