விழுப்புரம் டூ மாம்பழப்பட்டு சாலையில் உள்ளது இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI- Rural Self Employment Training Institute ). இந்த நிறுவன மூலம் 60க்கும் சிறு தொழில்கள் செய்வது எப்படி என இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.
மேலும் கிராம மக்களுக்கு பல்வேறு, சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் பல மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ஷாலினியிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்புக்காக இந்தியன் வங்கி உதவியுடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சுய வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவகிறது. இதில்,4,000நபர்கள், 25,000 ரூபாய் வரை மாத வருமானமாகசம்பாதிக்கின்றனர்.
மேலும், 61 வகையான சுய தொழில்கள் செய்வதற்கான, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஆடு ,கோழி, மாடு வளர்ப்பு, மலர் வளர்ப்பு, ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோன்று, சேவை சார்ந்த பயிற்சிகளாக செல்போன் சர்வீஸ்,கணினி மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் பழுது சரிப்பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பணி கற்றுத் தரப்படுகிறது.
மேலும், இந்த பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பயிற்சிக்கு வரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காலை, மதிய உணவு மட்டுமின்றி இடையில் டீ, ஸ்னாக்ஸ் ஆகியவைகளும் வழஙகப்படுகிறது. பயிற்சியின்போது தொழில் செய்யக்கூடிய குழுக்களுக்கு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தையல் மெஷின், மற்ற உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. தற்போது, இந்தப் பயிற்சி மையத்தில், அழகு கலை பயிற்சி மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி யாருக்கெல்லாம் தரப்படுகிறது?
மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.இல்லையெனில்,100 நாள் திட்ட வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கலாம்.ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.எட்டாம் வகுப்பு வரை படித்த ஆண்கள், பெண்கள் என இருபாலர் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது” என ஷாலினி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பயிற்சி முடிவில், மத்திய அரசின் சான்றிதழ், இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சான்றிதழும் வழங்கப்படும். மேலும் சுயத்தொழில் தொடங்க விருப்பமுள்ள நபர்களுக்கு வங்கிக்கடன் பெற தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அடுத்த மாதத்திற்கான பயிற்சி வகுப்புகளான கம்ப்யூட்டர் டேலி மற்றும் பாஸ் புட் உணவு தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் உள்ள நபர்கள்இந்த நிறுவனத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, அதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யலாம் என தெரிவித்தார்.
மேலும் கம்ப்யூட்டர் டேலிக்குஏப்ரல் 22ஆம் தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் வரும் நபர்கள் கட்டாயமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மாற்று சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ் 100 நாள் வேலை செய்பவராக இருந்தால் அந்த அட்டை போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இந்த நிறுவனம் மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்தும், அல்லது 04146294115,7598466681 என்று எண்ணிற்கு தொடர்பு கொண்டு முழு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என ஷாலினி தெரிவித்தார்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment