HSCC நிறுவனத்தில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Agri Info

Adding Green to your Life

April 1, 2024

HSCC நிறுவனத்தில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 Executive, Deputy Manager, Manager, Senior Manager, Deputy General Manager ஆகிய பணிகளுக்கென HSCC (India) Limited-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 38 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

HSCC Limited பணியிடங்கள்:

பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive – 19 பணியிடங்கள்
  • Deputy Manager – 08 பணியிடங்கள்
  • Manager – 07 பணியிடங்கள்
  • Senior Manager – 03 பணியிடங்கள்
  • Deputy General Manager – 01 பணியிடம்

HSCC Limited கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Diploma, MBA, Graduate Degree, LLB ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

HSCC Limited வயது விவரம்:

  • Executive பணிக்கு 28 வயது எனவும்,
  • Deputy Manager பணிக்கு 33 வயது எனவும்,
  • Manager பணிக்கு 37 வயது எனவும்,
  • Senior Manager பணிக்கு 41 வயது எனவும்,
  • Deputy General Manager பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HSCC Limited ஊதிய விவரம்:

இந்த HSCC நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.30,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

HSCC Limited தேர்வு செய்யும் முறை:

  • Interview
  • Skill Test
  • Written Test
  • Group Discussion
  • Personal Interaction

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD / Internal Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.1000/-

HSCC Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 20.04.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment