NIRT தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16,000/- - Agri Info

Adding Green to your Life

April 27, 2024

NIRT தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16,000/-

 காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் லிமிடெட் (ICMR NIRT) ஆனது Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் மே 9 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ICMR NIRT காலிப்பணியிடங்கள்:

Driver பதவிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICMR NIRT வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகபுர்வர் அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV மற்றும் இரு சக்கர வாகன உரிமம் மற்றும் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ICMR-National Institute for Research in Tuberculosis, No: 1 Mayor Sathymoorthy Road, Chetpet, Chennai-600031 என்ற முகவரியில் மே 9 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Application Pdf


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment