Repco மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – ஆண்டுக்கு ரூ.60 லட்சம் ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

April 11, 2024

Repco மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – ஆண்டுக்கு ரூ.60 லட்சம் ஊதியம்!

 Repco மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Managing Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24-04-2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RMFL காலிப்பணியிடங்கள்:

Managing Director பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளன.

RMFL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்ச கல்வி தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிக நிர்வாகம் / நிதி / வணிகம் / பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது பட்டய கணக்கியல், காஸ்ட் அக்கவுண்டன்சி, பட்டய நிதி ஆய்வாளர் அல்லது அதற்கு சமமான தொழில்முறை தகுதிகள் விரும்பத்தக்கதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

31-03-2024 தேதியின்படி 55 வயதுக்கு குறையாமலும் 57 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரை மற்றும் வாரியத்தின் ஒப்புதலின் பேரில் மேற்கண்ட தகுதி நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட உள்ளது. செயல்திறன் அடிப்படையில் ஊதியம் மற்றும் வருடாந்திர அதிகரிப்பு மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RMFL Director தேர்வு செயல் முறை:

  • Shortlisting
  • Personal Interview

RMFL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Board of Directors, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai-600 035. PH – 044-24310212 என்ற முகவரிக்கு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment