பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி பொறியாளர் பணிகளுக்கான 968 காலிப்பணியிடங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது. இந்நிலையில் விண்ணப்பித்த நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
SSC JE 2024:
பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்குமான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மார்ச் 28ஆம் தேதி அன்று வெளியான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளுக்கான 968 ஜூனியர் இன்ஜினியர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு விட்டது. ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு ஏப்ரல் 18ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவங்களில் உள்ள மாற்றங்களை திருத்தம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று நிலைகளைக் கொண்ட இத்தேர்வின் முதல் கட்ட தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பி.இ அல்லது பி.டெக் போன்ற கல்வி தகுதிகளை கொண்ட நபர்கள் இப்பணிக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான அனுமதி அட்டை வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 முதல் 32 வயது வரை குறிப்பிட்ட பணிக்கான வயது வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment