புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், புதுக்கோட்டை நகராட்சி, காந்தி பூங்கா அருகில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2021-2022ன் கீழ், ரூ.194.28 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் இணையதள வசதியுடன் கூடிய 10 எண்ணிக்கை கணினி மற்றும் (Interactive Pannel Board) ஆகியவைகளுடன் உள்ளது. இந்த நூலகத்தில் தற்போது 2,280 புத்தகங்கள் பெறப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் 4,500 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு 40 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையிலும், 10 நபர்கள் கணிணியில் படிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில், இணையத்தள வசதிகளுடன் கூடிய கணிப்பொறி விநியோகிதம் முதல் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கூடிய கணிப்பொறி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அதாவது இதற்காக அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் கணினி வாயிலாகவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி குரூப் டிஸ்கஷன், கேள்வி பதில் நிகழ்ச்சி, எழுத்து தேர்வு போன்றவையும் நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுசார் மைய ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தெரிவித்தார்.
🔻🔻🔻
No comments:
Post a Comment