ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலமாகும் சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளதால் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பேருந்து, ரயில் மற்றும் கார் வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். பாம்பன் வழியாக ரயில் வரமுடியாத சூழலால் மண்டபத்துடன் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் மண்டபத்தில் இருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வருவதால் கூடுதலாக பேருந்துகள் மற்றும் சுற்று பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் பணிமனையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வயது வரம்பு 45-ற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், மேலும், தகவலுக்கு 9487898118 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment