பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை 2-ம் தேதி துணைத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்காக மே 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. 8,94,264 மாணவ மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்நிலையில், பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளியானது. பொதுத் தேர்வு எழுதியவர்களில், 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற ஜூலை மாதம்2-ம் தேதி முதல் 8-ம் தேதிவரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, வருகிற 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்கள், துணைத் தேர்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, பயிற்சி பெறுகிறார்கள். இவர்களுக்கு, உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளானது துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment