உலர்ந்த அத்தி பழங்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துக்களை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. இரவு முழுவதும் உலர்ந்த அத்தி பழங்களை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கிறது. அவை என்ன என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
நார்ச்சத்து நிறைந்தது ஊறவைத்த அத்திப்பழங்கள் உணவு நார்ச்சத்தின் அற்புதமான மூலமாக அமைவதால் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்பட்டு ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படுகிறது : அத்தி பழங்களில் பொட்டாசியம் என்ற மினரல் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. உங்களது அன்றாட டயட்டில் ஊறவைத்த அத்தி பழங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து, இதய செயல்பாடு அதிகரிக்கிறது.
நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது : உலர்ந்த அத்தி பழங்களில் இருக்கும் இயற்கை இனிப்பு சுவையையும் தாண்டி, இது குறைந்த கிளைசிமிக் எண் கொண்டிருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான உணவாக அமைகிறது. ஊறவைத்த அத்தி பழங்களில் உள்ள நீரில் கரையும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது : குறைந்த கலோரிகள் அதே நேரத்தில் அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது : கால்சியத்தின் சிறந்த மூலமான இந்த ஊறவைத்த அத்திப்பழங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கிறது. அத்தி பழங்களை தினமும் சாப்பிட்டு வர எலும்பு இழப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு உலர்ந்த அத்திப்பழம் அற்புதமான தீர்வாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது : வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உலர்ந்த அத்திப்பழம் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது. வழக்கமான முறையில் நீங்கள் ஊறவைத்த அத்தி பழங்களை சாப்பிட்டு வர உங்களுடைய நோய் எதிர்ப்பு செயல்பாடு அதிகரிக்கும்.
சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது : ஊற வைத்த அத்தி பழங்களில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் E மற்றும் சிங்க் போன்றவை ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது, வீக்கத்தை குறைக்கிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இது ஒரு சிறந்த உணவு.
புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது : கூமரின்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஃபைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் நீங்கள் ஊறவைத்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது : ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலத்தின் இயற்கையான மூலமாக அத்தி பழங்கள் தூக்கத்திற்கு அவசியமான செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. எனவே இரவு தூங்குவதற்கு முன்பு ஊற வைத்த அத்தி பழங்களை சாப்பிட்டு வர நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
🔻 🔻 🔻
0 Comments:
Post a Comment