₹ 5000 ஊக்கத்தொகை... 6 வார கோர்ஸ் முடித்தால் கைநிறைய சம்பளம் - தமிழ்நாடு அரசுஅறிவிப்பு - Agri Info

Adding Green to your Life

May 16, 2024

₹ 5000 ஊக்கத்தொகை... 6 வார கோர்ஸ் முடித்தால் கைநிறைய சம்பளம் - தமிழ்நாடு அரசுஅறிவிப்பு

 
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.  அதன் அடிப்படையில் தாட்கோ மூலமாக டி.சி.எஸ் அயன் (TCS ION) மற்றும் அப்போலோ (Apollo MedSkills) நிறுவனம் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 6 வார காலம் இணைய வழி மருத்துவமனைநிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. 2023, 2022 மற்றும் 2021ல் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத நர்சிங் பட்டதாரிகளும் இதற்கு தகுதியானவர்கள்.

இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.29,500 ஆகும். இப்பயிற்சியானது  இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில்
இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமணைகளிலும் அதனுடன்
தொடர்புடைய முன்னனி மருத்துவமணைகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

மாணாக்கர்களின் திறமைக்கேற்றவாறு வெளிநாடுகளில் உள்ள மருத்துவமணைகளிலும் சென்று பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.இந்த பயிற்சி குறித்து www.tahdco.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment